முகப்பு /செய்தி /தமிழ்நாடு / அதிமுக பொதுக்குழு வழக்கு... ஓபிஎஸ், இபிஎஸ் எதிர்காலம்... உச்சநீதிமன்ற தீர்ப்பு ஏற்படுத்தும் மாற்றங்கள் இவைதான்..!

அதிமுக பொதுக்குழு வழக்கு... ஓபிஎஸ், இபிஎஸ் எதிர்காலம்... உச்சநீதிமன்ற தீர்ப்பு ஏற்படுத்தும் மாற்றங்கள் இவைதான்..!

மாதிரி படம்

மாதிரி படம்

அதிமுக தொடர்பாக உச்ச நீதிமன்றம் இன்று அளிக்கும் தீர்ப்பு என்னென்ன மாற்றங்களை ஏற்படுத்தும் என பார்க்கலாம்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Chennai, India

கடந்த ஆண்டு ஜூலை 11-ல் நடைபெற்ற பொதுக்குழுக் கூட்டம் செல்லும் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தால், அதிமுகவின் இடைக்காலப் பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தொடருவார். கட்சி மற்றும் கட்சியின் சின்னமான இரட்டை இலை சின்னம் எடப்பாடி பழனிசாமி வசம் செல்லும.

மேலும், ஓ.பன்னீர்செல்வம் கட்சியிலிருந்து நீக்கப்பட்டதும் உறுதியாகும். தமிழ்நாடு அரசியல் களத்தில் ஓ.பி.எஸ். மற்றும் அவரால் நியமிக்கப்பட்ட நிர்வாகிகளின் நிலைமை மிகப்பெரிய கேள்விகுறியாகும். அதேநேரத்தில் உச்ச நீதிமன்ற தீர்ப்பை ஏற்று, எடப்பாடி பழனிசாமி தரப்பை இந்திய தேர்தல் ஆணையமும் அங்கீகாரம் அளிக்கலாம்.

' isDesktop="true" id="897047" youtubeid="ufTPwNXETOs" category="tamil-nadu">

அதேநேரத்தில், ஓ.பன்னீர்செல்வத்தின் கோரிக்கையை உச்ச நீதிமன்றம் ஏற்றால், மீண்டும் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் உருவாகும். எம்ஜிஆர் எழுதிவைத்த உயில்படி கட்சித் தொண்டர்களே பொதுச் செயலாளரை தேர்ந்தெடுக்கப்படவும் வாய்ப்புள்ளது. மேலும் அதிமுகவில் கடந்த ஆண்டு ஜூலை முதல் 7 மாதங்களாக நிலவி வரும் குழப்பத்திற்கும் விடிவு கிடைக்கும்.

அதேநேரத்தில் இந்த தீர்ப்பு ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் முடிவுகளில் எதிரொலிக்குமா என்றும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இவைகள் தவிர, தாம்தான் அதிமுவின் பொதுச் செயலாளர் என கூறி வரும் சசிகலா, அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் என்ற தனிக்கட்சியை நடத்தி வரும் டிடிவி தினகரன் நிலை குறித்தும் கேள்விகள் எழுந்துள்ளன.

First published:

Tags: AIADMK, Edappadi Palaniswami, O Panneerselvam, Supreme court