Home /News /tamil-nadu /

திருச்சி திமுக பெண் கவுன்சிலருக்கு எதிராக அதிமுக வேட்பாளர் வழக்கு..

திருச்சி திமுக பெண் கவுன்சிலருக்கு எதிராக அதிமுக வேட்பாளர் வழக்கு..

அண்ணா அறிவாலயம்

அண்ணா அறிவாலயம்

திமுக கவுன்சிலர் விஜயா ஜெயராஜ், கடந்த மாநகராட்சி தேர்தலில், திமுக சார்பில் மேயர் வேட்பாளராக போட்டியிட்டு தோல்வியுற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

திருச்சி மாநகராட்சி, 11வது வார்டில் திமுக சார்பில் போட்டியிட்ட, திமுக மகளிரணி நிர்வாகி விஜயா ஜெயராஜ், வெற்றிப் பெற்றதாக அறிவிக்கப்பட்டார். தற்போது அவர் கவுன்சிலராக உள்ளார்.

இந்நிலையில், அவரை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளரும், முன்னாள் கவுன்சிலருமான வனிதா, திருச்சி மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடுத்துள்ளார்.

அதில், 'விஜயா ஜெயராஜின் கணவர் ஜெயராஜ், திருச்சி மாநகராட்சியில் முதல்நிலை ஒப்பந்தத்தாராக உள்ளார். இதை தனது வேட்புமனுவில் (அபிடவிட்) குறிப்பிடாமல் மறைத்து விஜயா ஜெயராஜ் தேர்தலில் போட்டியிட்டுள்ளார்.

இது, தேர்தல் அதிகாரிகளாக இருந்த மாநகராட்சி அலுவலர்களுக்கு நன்கு தெரிந்திருந்தும் அவர்கள் அவரது வேட்புமனுவை ஏற்றுக் கொண்டுள்ளனர்.

ஆளுநர் தேநீர் விருந்தைப் தி.மு.க புறக்கணித்தால் டீ செலவு மிச்சம் - அண்ணாமலை விமர்சனம்

எனவே, திட்டமிட்டு மாநகராட்சி விதிகளுக்கு புறம்பாக செயல்பட்டுள்ளதால், இதுதொடர்பாக விசாரணை நடத்தி விஜயா ஜெயராஜ் வெற்றி செல்லாது.

அவருக்கு அடுத்தபடியாக அதிக ஓட்டுகள் வாங்கிய தன்னை வெற்றி பெற்றதாக அறிவிக்க வேண்டும்' என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
இம்மனுவை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம், வரும் ஜூன் 6ம் தேதி விசாரணைக்கு எடுத்துக் கொண்டுள்ளது.

திமுக கவுன்சிலர் விஜயா ஜெயராஜ், கடந்த மாநகராட்சி தேர்தலில், திமுக சார்பில் மேயர் வேட்பாளராக போட்டியிட்டு தோல்வியுற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
Published by:Esakki Raja
First published:

Tags: DMK

அடுத்த செய்தி