‘உதவி செய்கிறேனோ இல்லையோ உபத்திரம் செய்யாமால் இருப்பேன்’: கைகூப்பி நின்ற அதிமுக வேட்பாளர்

‘உதவி செய்கிறேனோ இல்லையோ உபத்திரம் செய்யாமால் இருப்பேன்’: கைகூப்பி நின்ற அதிமுக வேட்பாளர்

உங்களுக்கு உள்ளூர் வேட்பாளர் வேண்டுமா அல்லது வெளியூர் வேட்பாளர் வேண்டுமா என்று கேள்வி எழுப்பினார்.

உங்களுக்கு உள்ளூர் வேட்பாளர் வேண்டுமா அல்லது வெளியூர் வேட்பாளர் வேண்டுமா என்று கேள்வி எழுப்பினார்.

  • Share this:
உங்களுக்கு உதவி செய்கிறேனோ இல்லையோ உயிர் உள்ளவரை  உபத்திரம் செய்யாமால் இருப்பேன் என்று, 2018 இடைதேர்தலில் உங்களின் பொற்பாதம் தொட்டு கூறினேன் அதை எள்ளளவும் மாறாமல் இருந்து வந்திருக்கின்றேன், எதாவது தவறாக நடந்து இருந்தால் என்னை மன்னித்து விடுங்கள் என்று கை கூப்பி மன்னிப்பு கேட்டார் மானாமதுரை தனி தொகுதி அதிமுக வேட்பாளர் எஸ். நாகராஜன். மானாமதுரை அதிமுகவின் எஃகு கோட்டை இங்கு எவராலும் கோட்டையில் ஓட்டை போட முடியாது என்றும் அப்போது அவர் கூறினார்.

சட்டமன்ற தேர்தல் சூடு பிடித்துள்ள நிலையில் தேர்தல் பிரச்சாரம் விறுவிறுப்பாக நடந்து வருகிறது இதில் சிவகங்கை மாவட்டம் மானாமதுரை தனி தொகுதி அதிமுக வேட்பாளர் எஸ். நாகராஜன் போட்டியிடுகிறார். இவரை எதிர்த்து திமுக வேட்பாளர் முன்னாள் அமைச்சர் தமிழரசி களத்தில் உள்ளார்.  இவர் 2011ஆம் ஆண்டு மானாமதுரை தொகுயில் நின்று அதிமுகவிடம் தோற்று போனவர் தோற்று போனதுடன் தொகுதிக்கு பக்கமே தலை காட்டவில்லை என்பதே எதிர்கட்சிகளின் குற்றச்சாட்டு.

இந்த குற்றசாட்டை முன்வைத்து, அதிமுக வேட்பாளர் நாகராஜன்  பிரச்சாரம் செய்யும்பொழுது,  பேசுகையில் கடந்த 2011 சட்டமன்ற தேர்தலில் திமுக வேட்பாளர் தமிழரசி அதிமுகவை எதிர்த்து போட்டியிட்டு தோல்வியடைந்தவர். தமிழரசி அதற்குபிறகு மானாமதுரை சட்டமன்ற தொகுதி   பக்கமே தலை காட்டவில்லை. ஆனால் நான் உள்ளூரில்தான் உள்ளேன் எனது வீடு இங்குதான் உள்ளது, மக்களின் குறைகளை தினந்தோறும் கேட்டு வருகின்றேன், நான் நல்லது கெட்டதுக்கு  சென்று வருகிறேன்.

எப்போதுமே சட்டமன்ற அலுவலகத்தில் தான் இருக்கிறேன். மக்களின் குறைகள் அனைத்தும் நான் என்னால் முடிந்தவரை தீர்த்து வைகத்துள்ளேன். ஏற்கனவே 2018 இடைத்தேர்தலில் நிற்கும் போது  உங்களுக்கு உதவி. செய்கின்றேனோ இல்லையோ உயிர் உள்ளவரை  உபத்திரம் செய்யாமால் இருப்பேன் என்று உங்களின் பொற்பாதம் தொட்டு கூறினேன், அதை எள்ளளவும் மாறாமல் இருந்து வருகின்றேன். எதாவது தவறாக நடந்து இருந்தால் என்னை மன்னித்து விடுங்கள்” என்று கை கூப்பி மன்னிப்பு கேட்டார்.

Must Read :  ஸ்டாலினை வரவேற்க சக்தி வாய்ந்த வெடிகள்: காவல் துறை அதிகாரி உட்பட பலருக்கு தீ காயம்

 

மேலும், ”ஆகவே இரட்டை இலை சின்னத்தில் நீங்கள் வாக்களித்து, மீண்டும் முதலமைச்சராக எடப்பாடி பழனிச்சாமியை அமரச்செய்ய வேண்டும்” இவ்வாறு மக்களிடம் பிரச்சாரம் செய்தார்.
Published by:Suresh V
First published: