முகப்பு /செய்தி /தமிழ்நாடு / சொத்து வரி உயர்வை கண்டித்து சட்டப்பேரவையில் இருந்து அதிமுக, பாஜக வெளிநடப்பு

சொத்து வரி உயர்வை கண்டித்து சட்டப்பேரவையில் இருந்து அதிமுக, பாஜக வெளிநடப்பு

அதிமுக வெளிநடப்பு

அதிமுக வெளிநடப்பு

TN Assembly Session : சொத்து வரி உயர்வை கண்டித்து தமிழக சட்டப்பேரவையில் இருந்து அதிமுக வெளிநடப்பு செய்தது. அதேபோல பாஜகவும் வெளிநடப்பு செய்தது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

தமிழ்நாட்டில் சொத்து வரி உயர்வு குறித்து சட்டப்பேரவையில் அதிமுக கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவந்தது. அதன்படி, எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி , சொத்துவரி தொடர்பாக கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்து பேசினார்.

அவர் பேசுகையில், சொத்து வரி மக்கள் மீது பெரும் சுமையை சுமத்தியுள்ளது. மத்திய அரசு சொத்துவரியை உயர்த்த எந்த அறிவிப்புகள் செய்யவில்லை என்றும் தமிழக அரசு உயர்த்திய சொத்து வரியை திரும்ப பெறவேண்டும் எனவும் கூறினார்.

இந்நிலையில், அதிமுக சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தது. இதேபோல சொத்து வரி உயர்வை கண்டித்து பாஜகவும் வெளிநடப்பு செய்தது.

சட்டப்பேரவையில் இருந்து வெளியே வந்த எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, அவர் பேசுகையில், சொத்து வரி உயர்வால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக கூறினார்.

Must Read : புறவழிச் சாலைகள் விளைநிலங்களில் அமைப்பதற்கு எதிர்ப்பு : தூக்குகயிறு மாட்டியும், சங்கு ஊதியும் விவசாயிகள் போராட்டம்

எனவே, சொத்துவரியை திரும்பப் பெற வேண்டும் என்றும் கூறினார். அத்துடன் அதிமுகவினர், தமிழக அரசு சொத்து வரியை திரும்பப் பெற வேண்டும் என கோஷமிட்டனர்.

இந்நிலையில், மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சிகளில் உயர்த்தப்பட்ட சொத்துவரி தொடர்பாக பேசிய முதலமைச்சர், சொத்துவரி உயர்வை மனமுவந்து செய்யவில்லை என்றும், உள்ளாட்சி அமைப்புகளுக்கு வருவாய் பற்றாக்குறையால், மக்களின் தேவைகளை நிறைவேற்றுவதில் சுணக்கம் இருக்கிறது என்றும் கூறினார். மேலும், மக்களை பாதிக்காமல், ஏழை மற்றும் நடுத்தர மக்களை பாதிக்காமல் வரி உயர்த்தப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

First published:

Tags: ADMK, BJP, Edappadi Palaniswami, TN Assembly