• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • அதிமுக- பாஜக தொகுதி பங்கீடு சுமூகமாக நிறைவு பெறுமா? 

அதிமுக- பாஜக தொகுதி பங்கீடு சுமூகமாக நிறைவு பெறுமா? 

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

தமிழக சட்டபேரவை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் கூட்டணியை இறுதி செய்வதில் கட்சிகள் ஈடுபட்டுள்ளன.

  • Share this:
அதிமுக கூட்டணியில் பாமகவிற்கு 23 இடங்கள் ஒதுக்கப்பட்டு ஒப்பந்தம் கையெழுத்தான நிலையில், பாஜகவிற்கு 22 இடங்கள் ஒதுக்க அதிமுக முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆனால் பாஜக மாவட்டத்திற்கு ஒரு இடம் வீதம் 40 தொகுதிகள் கேட்பதால் கூட்டணியில் தொகுதி உடன்பாடு  தாமதமாகிறது. அதே போல் கன்னியாகுமரி மக்களவை தொகுதியில் போட்டியிடவும் முடிவு செய்துள்ளது.

டெல்லியிலிருந்து தனி விமானம் மூலம் நேற்று இரவு தமிழகம் வருகை தந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்திக்க தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளர்கள் கிஷன் ரெட்டி, விகே சிங், தமிழக பாஜக மேலிட பொறுப்பாளர் சி.டி.ரவி, தமிழக பாஜக தலைவர் முருகன் உள்ளிட்டோர் சென்னையில் அவர் தங்கியிருந்த தனியார் ஓட்டலில் சந்தித்து ஆலோசனை நடத்தினர். இதில் அதிமுக முடிவு பற்றி அமித்ஷாவுடன் விரிவாக ஆலோசிக்கப்பட்டது.

முன்னதாக தமிழக பாஜக தேர்தல் குழுவினர் நேற்று காலை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியைச் சந்தித்து ஆலோசனை நடத்திய சூழலில் இன்று காலை அமித்ஷாவை சந்தித்து ஆலோசனை நடத்தினர். பாஜக தேர்தல் குழுவினரோடு 2 மணி நேரத்திற்கு மேல் ஆலோசனை நடத்திய  உள்துறை அமைச்சர் அமித்ஷா, காரைக்கால் மற்றும் விழுப்புரத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக புறப்பட்டார்.

எடப்பாடி பழனிசாமி காலை அமித்ஷாவைச் சந்திக்கலாம் என கூறப்பட்ட நிலையில் அதிமுக தரப்பில் யாரும் சந்திக்கவில்லை, முதல்வரின் சந்திப்பும் திட்டமிட்டப்படி நடக்கவில்லை. மாலை நடைபெறும் கூட்டத்திலும் அதிமுக சார்பில் பங்கேற்பு குறித்து எந்த தகவலும் இல்லை என கூறப்படுகிறது.

மேலும் படிக்க...  சிதம்பரத்தில் கிள்ளை மாசிமக விழாவில் பூவராக சாமிக்கு முஸ்லிம்கள் வரவேற்பு...

உள்துறை அமைச்சர் அமித்ஷாவுடன் தமிழக பாஜக தலைவர் முருகன், தமிழக பாஜக மேலிட பொறுப்பாளர் சிடி ரவி ஆகியோர் காரைக்கால் சென்றனர். அமித்ஷா தமிழகம் வந்துள்ள நிலையில் இதுவரை தமிழக முதல்வரைச் சந்திக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.



உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vaijayanthi S
First published: