அமித்ஷா முன்னிலையில் அதிமுக - பாஜக கூட்டணி உறுதி.. தொகுதி பங்கீடு குறித்து எடுக்கப்பட்ட முடிவு என்ன?
அமித்ஷா முன்னிலையில் அதிமுக - பாஜக கூட்டணி உறுதி செய்யப்பட்ட போதும், தொகுதி பங்கீடு குறித்து பேசப்படவில்லை என தகவல்கள் வெளியாகி உள்ளன.

அமித்ஷா, எடப்பாடி பழனிசாமி
- News18 Tamil
- Last Updated: November 23, 2020, 8:12 AM IST
சென்னைக்கு இரு நாள் பயணமாக வந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவிடம், அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் துணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் ஆலோசனை நடத்தினர். இந்த சந்திப்பில், அதிமுக - பாஜக கூட்டணி உறுதி செய்யப்பட்ட போதும் தொகுதி பங்கீடு பற்றி பேசப்படவில்லை என்றும், இனி முரணான கருத்துகளை இருகட்சியினரும் தெரிவிக்க வேண்டாம் என்றும் முடிவு செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
பாஜகவுக்கு குறிப்பிட்ட தொகுதிகளை தரக்கோரி அமித்ஷா வலியுறுத்தவில்லை எனவும், அதிமுகவுடன் தொகுதி பங்கீடு குறித்து பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா விரைவில் ஆலோசனை நடத்துவார் எனவும் தகவல் வெளியாகி உள்ளது. 30 தொகுதிகளுக்கும் அதிகமாக கேட்டுப்பெற அமித்ஷாவை பாஜக நிர்வாகிகள் வலியுறுத்தியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இதுபோல் சட்டமன்றத் தேர்தல் தேதி அறிவித்த பின்பே, தொகுதி பங்கீடு பற்றி பேசுவதற்கு அதிமுக விருப்பம் தெரிவித்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் படிக்க.. Cyclone Nivar | காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுப்பெற்றுள்ளது. அடுத்த 24 மணிநேரத்தில் புயலாக வலுப்பெறும்.
இதற்கு முன்னர், பாஜக நிர்வாகிகள் மற்றும் உயர்நிலைக்குழு உறுப்பினர்களுடன், தமிழக தேர்தல் குறித்து அமித்ஷா ஆலோசனை மேற்கொண்டார்.
அப்போது பேசிய அவர், மத்திய அரசு திட்டங்களை மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும் என்றும், பூத் கமிட்டியை வலுப்படுத்த வேண்டும் எனவும் கூறியுள்ளார். தமிழகத்தில் பாஜகவின் வளர்ச்சி மகிழ்ச்சி அளிப்பதாக கூறிய அமித்ஷா, வேல் யாத்திரை மேற்கொள்வதாலோ, அதனால் கைது செய்யப்படுவதாலோ கட்சி வளராது எனவும், அடிமட்டத்தில் இறங்கி பணியாற்ற வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
பாஜகவுக்கு குறிப்பிட்ட தொகுதிகளை தரக்கோரி அமித்ஷா வலியுறுத்தவில்லை எனவும், அதிமுகவுடன் தொகுதி பங்கீடு குறித்து பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா விரைவில் ஆலோசனை நடத்துவார் எனவும் தகவல் வெளியாகி உள்ளது. 30 தொகுதிகளுக்கும் அதிகமாக கேட்டுப்பெற அமித்ஷாவை பாஜக நிர்வாகிகள் வலியுறுத்தியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இதுபோல் சட்டமன்றத் தேர்தல் தேதி அறிவித்த பின்பே, தொகுதி பங்கீடு பற்றி பேசுவதற்கு அதிமுக விருப்பம் தெரிவித்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.