அதிமுகவில் மகளிரணி, இலக்கிய அணி, வர்த்தக அணி பொறுப்புகளுக்கு செயலாளர்கள் நியமனம்!

அதிமுகவில் மகளிரணி, இலக்கிய அணி, வர்த்தக அணி உள்ளிட்ட பொறுப்புகளுக்கு செயலாளர்கள் நியமனம்!

அதிமுகவின் மகளிரணி செயலாளராக முன்னாள் அமைச்சர் பா.வளர்மதி, இலக்கிய அணி செயலாளராக வைகைச்செல்வன் உள்ளிட்டோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

 • Share this:
  அதிமுகவில் மகளிரணி, இலக்கிய அணி, வர்த்தக அணி உள்ளிட்ட பொறுப்புகளுக்கு செயலாளர்கள் நியமனம் செய்து ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளனர்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  இதுதொடர்பாக ஒருங்கிணைப்பாளர்கள் இருவரும் கூட்டாக வெளியிட்டுள்ள அறிவிப்பில், அதிமுக இலக்கிய அணிச் செயலாளர் பொறுப்பில் இருக்கும் பா.வளர்மதி, கொள்கை பரப்பு துணைச் செயலாளர் பொறுப்பில் இருக்கும் வைகைச்செல்வன் ஆகிய இருவரும் அவரவர் வகித்து வரும் பொறுப்புகளில் இருந்து விடுவிக்கப்படுகின்றனர்.

  Also read: ஜூலை 28ஆம் தேதி தமிழகம் முழுவதும் அதிமுக ஆர்ப்பாட்டம் - ஓபிஎஸ்-ஈபிஎஸ் அறிவிப்பு

  அதிமுக தலைமைக் கழக நிர்வாகிகளாவும், சார்பு அமைப்புகளின் துணை நிர்வாகிகளாகவும் கீழ்கண்டவர்கள் புதிதாக நியமிக்கப்படுகின்றனர்.

  அதிமுக மகளிர் அணி நிர்வாகிகள்

  மகளிர் அணி செயலாளராக பா.வளர்மதி நியமிக்கப்படுகிறார்.

  மகளிர் அணி இணைச் செயலாளராக மரகமதம் குமரவேல் நியமிக்கப்படுகிறார்.

  அதிமுக இலக்கிய அணி

  இலக்கிய அணி செயலாளராக வைகைச் செல்வன் நியமிக்கப்படுகிறார்.

  அதிமுக வர்த்தக அணி நிர்வாகிகள்

  அதிமுக வர்த்தக அணி செயலாளராக V.N.P.வெங்கட்ராமன் நியமிக்கப்படுகிறார்.

  இணைச்செயலாளராக ஆனந்தராஜ் நியமிக்கப்படுகிறார் என்று அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

   
  Published by:Esakki Raja
  First published: