ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

நீட் ரத்துக்கு அதிமுக ஆதரவு அளிக்கும்: முதல்வர் ஸ்டாலினுக்கு ஓ.பி.எஸ். கடிதம்

நீட் ரத்துக்கு அதிமுக ஆதரவு அளிக்கும்: முதல்வர் ஸ்டாலினுக்கு ஓ.பி.எஸ். கடிதம்

அதிமுக அலுவலகம்

அதிமுக அலுவலகம்

நீட் தேர்வு ரத்து குறித்த அதிமுகவின் கருத்துகள் ஏற்கனவே தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையிலும் 8.1.2022 அன்று நடைபெற்ற சட்டமன்ற அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டத்திலும் விரிவாக எடுத்துரைக்கப்பட்டன. 

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :

  நீட் தேர்வு ரத்து தொடர்பாக எடுக்கப்படும் அனைத்து சட்டப்படியான நடவடிக்கையையும் அதிமுக ஆதரிக்கும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு எழுதியுள்ள கடிதத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.

  மருத்துவ மாணவர் சேர்க்கைக்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிப்பதற்கான சட்டமுடிவை ஆளுநர் திருப்பி அனுப்பியதால், இது  தொடர்பாக அடுத்து என்ன செய்வது என்பது குறித்து ஆலோசிப்பதற்கான அனைத்துக் கட்சி கூட்டம் இன்று நடைபெற்றது. இதில்,  சட்டமன்ற சிறப்பு கூட்டத்தை கூட்டி, ஆளுநர் கூறிய கருத்துகள் தொடர்பாக தெளிவாக விவாதித்து, சரியான வாதங்களை முன்வைத்து சட்டமுன் வடிவை மீண்டும் நிறைவேற்றி குடியரசுத் தலைவின் ஒப்புதலை பெற மீண்டும் அனுப்பி வைப்பது  என்று முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

  இந்த கூட்டத்தில் பாஜக மற்றும் அதிமுக பங்கேற்கவில்லை. நீட் தேர்வுக்கு எதிர்ப்பு மனநிலையில் உள்ள அதிமுக இந்த கூட்டத்தில் பங்கேற்காதது சலசலப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

  அதில், நீட் தேர்வில் இருந்து விலக்கு பெற வழிவகை செய்யும் சட்ட முடிவினை மறுபரிசீலனை செய்யும் பொருட்டு ஆளுநர் தமிழ்நாடு அரசிற்கு திருப்பி அனுப்பிய நிலையில், இது தொடர்பான அனைத்துக் கட்சி தலைவர்கள் கூட்டத்தில் பங்கேற்று ஆலோசனை வழங்க அதிமுக சார்பில் சட்டமன்ற உறூப்பினரை அனுப்பி வைக்க கோரியுள்ளீர்கள்.

  இதையும் படிங்க: மீண்டும் ஆளுநருக்கு நீட் விலக்கு மசோதாவை அனுப்ப முடிவு...சிறப்பு சட்டமன்ற கூட்டம் கூடுகிறது

  நீட் தேர்வு ரத்து குறித்த அதிமுகவின் கருத்துகள் ஏற்கனவே தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையிலும் 8.1.2022 அன்று நடைபெற்ற சட்டமன்ற அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டத்திலும் விரிவாக எடுத்துரைக்கப்பட்டன.  அதிமுகவை பொறுத்தவரை நீட் தேர்வு ரத்து செய்யப்பட வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளது.  எனவே, நீட் தேர்வு ரத்து தொடர்பாக எடுக்கப்படும் அனைத்ஹ்டு சட்டப்படியான நடவடிக்கையையும் அதிமுக ஆதரிக்கும்’ என்று தெரிவித்துள்ளார்.

  Published by:Murugesh M
  First published:

  Tags: ADMK, All Party Meeting, Neet Exam