• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • அதிமுகவின் 50-வது பொன்விழா ஆண்டு இன்று தொடக்கம்... தமிழகம் முழுவதும் சிறப்பு ஏற்பாடு

அதிமுகவின் 50-வது பொன்விழா ஆண்டு இன்று தொடக்கம்... தமிழகம் முழுவதும் சிறப்பு ஏற்பாடு

அதிமுக தலைமை அலுவலகம்

அதிமுக தலைமை அலுவலகம்

நமது அம்மா நாளிதழ் சார்பில் தயார் செய்யப்பட்டுள்ள பொன்விழா சிறப்பு மலரை இருவரும் வெளியிடுகின்றனர்.

  • Share this:
    அதிமுக தொடங்கப்பட்டதன் 50வது ஆண்டு பொன்விழாவை அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி இன்று தொடங்கி வைக்கின்றனர்.  முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆரால் 1972 ஆண்டு அக்டோபர் 17ம் தேதி அதிமுக தொடங்கப்பட்டது. அக்கட்சி தொடங்கப்பட்டு 49 ஆண்டுகள் நிறைவடைந்து, இன்று 50வது ஆண்டில் காலடி எடுத்து வைக்கிறது. இதனையொட்டி அதிமுகவின் 50வது ஆண்டு பொன்விழாவை நடப்பாண்டு முழுவதும் கொண்டாட அக்கட்சியின் தலைமை முடிவு செய்துள்ளது.

    அதன்படி சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் இன்று காலை 10 மணி அளவில் பொன்விழாவை தொடங்கி வைக்கின்றனர். நமது அம்மா நாளிதழ் சார்பில் தயார் செய்யப்பட்டுள்ள பொன்விழா சிறப்பு மலரை இருவரும் வெளியிடுகின்றனர்.

    பின்னர் மெரினாவில் உள்ள அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோரின் நினைவிடங்களில் ஓபிஎஸ், ஈபிஎஸ் மலர் தூவி மரியாதை செலுத்துகின்றனர்.  இந்த நிகழ்ச்சியில் அதிமுக நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர்கள் உள்ளிட்ட அனைவரும் தனிமனித இடைவெளியுடன் பங்கேற்க வேண்டும் என ஓபிஎஸ், ஈபிஎஸ் கேட்டுக் கொண்டனர்.

    Also Read : வாகன ஓட்டிகள் கவனத்திற்கு... சென்னை முக்கிய சாலைகளில் போக்குவரத்து மாற்றம்

    இதனிடையே சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகம் வண்ண மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. கட்டடம் முழுவதும் பச்சை மற்றும் வெள்ளை நிற மின்விளக்குகளால் ஒளிருகிறது. அலுவலக வாயில் முன்பு பிரம்மாண்ட வாழை மரங்கள் கட்டுப்பட்டு. பொம்மை யானைகள் நிறுத்தப்பட்டுள்ளன.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vijay R
    First published: