Home /News /tamil-nadu /

வேளாண் பட்ஜெட்: எந்த ஒரு பெரிய திட்டமும் இல்லாமல் கண்துடைப்பாக, காற்று அடைத்த பலூனாக உள்ளது.. எடப்பாடி விமர்சனம்

வேளாண் பட்ஜெட்: எந்த ஒரு பெரிய திட்டமும் இல்லாமல் கண்துடைப்பாக, காற்று அடைத்த பலூனாக உள்ளது.. எடப்பாடி விமர்சனம்

எடப்பாடி பழனிசாமி

எடப்பாடி பழனிசாமி

அதிமுக ஆட்சி காலம் தான் விவசாயிகளுக்கு பொற்காலம், குட்டிமராமத்து திட்டம், அனைகள் தூர் வாரும் பணிகள்,டெல்டா மாவட்டங்களை பாத்துக்காக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்து அதிமுக அரசு.

    வேளாண் பட்ஜெட் எந்த ஒரு பெரிய திட்டமும் இல்லாமல் கண்துடைப்பாக, காற்று அடைத்த பலூனாக உள்ளது என எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.

    2022-23ம் ஆண்டுக்கான வேளாண் நிதிநிலை அறிக்கையை வேளாண் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார்.

    இதுதொடர்பாக, செய்தியாளர்களை சந்தித்த எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கூறும்போது, வேளாண் பட்ஜெட் அல்ல, வேளாண் துறை மானிய கோரிக்கையில் உள்ள கொள்கை விளக்க குறிப்பில் உள்ளதை வாசித்திருக்கிறார். விவசாயிகளை எமற்றும் நாடகம். இதற்கு என தனி நிதி ஒதுக்கீடு செய்யவில்லை.

    பால்வளம், உணவு , கூட்டுறவு இவை அனைத்தும் தனி தனி துறைகளாக உள்ளது , தனி அமைச்சர்கள் உள்ளனர். இவற்றை எல்லாம் ஒருங்கினைத்து வேளாண் பட்ஜெட் எனும் மாயையை உருவாக்கி உள்ளனர்.

    தனியாக நிதி ஒதுக்கீடு செய்தால் மட்டுமே வேளாண் பட்ஜெட் சிறப்பு வாய்ந்ததாக இருக்கும். அதிமுக ஆட்சி காலம் தான் விவசாயிகளுக்கு பொற்காலம், குட்டிமராமத்து திட்டம், அனைகள் தூர் வாரும் பணிகள்,டெல்டா மாவட்டங்களை பாத்துக்காக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்து அதிமுக அரசு.

    இதையும் படிங்க -  விவசாய கூலித் தொழிலாளர்களை ஒருங்கிணைக்க புதிய திட்டம்... வேளாண் பட்ஜெட்டில் அறிவிப்பு

    முல்லை பெரியார் அணையின் நீர் மட்டத்தை உயர்த்தியது.விவசாயிகளுக்கு மும்முனை மின்சாரம் அளிக்கப்பட்டதும் அதிமுக ஆட்சியில் தான். தென்மேற்கு பருவ மழையின் போது பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இதுவரை நிவாரணம் அளிக்கவில்லை.

    விவசாயிகள் உற்பத்தி செய்யும் நெல் மூட்டைகளை, கொள்முதல் செய்து மாநில நிதியிலிருந்தே தொகை வழங்கப்பட்டது. ஆனால் திமுக ஆட்சியில் விவசாயிகள் அலைக்கழிக்கபடுகின்றனர்.

    ஒரு லட்சம் மூட்டைக்கு மேலாக கொள்முதல் நிலையத்தில் உள்ள நெல் முலைத்து அரசுக்கும் இழப்பு ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் நிர்வாக திறமை இல்லாத அரசு என்பது தெல்ல தெளிவாக தெரிகிறது.

    விவசாயிகள் கூட்டுறவு சங்கங்களில் பெற்ற ரூ.12,110 கோடி கடனை தள்ளுபடி செய்தது அதிமுக அரசு. இந்த அரசு 48 லட்சம் பேரில் 13 லட்சம் பேரை மட்டுமே தேர்வு செய்து நகை கடன் தள்ளுபடி செய்துள்ளது.

    எந்த ஒரு பெரிய திட்டமும் இல்லாமல் கண்துடைப்பாக, காற்று அடைத்த பலூனாக உள்ளது. தமிழ்நாடு மாடல் எனும் நிலையில் அதிமுக அரசு நிர்வாக திறமையின் காரணமாக மத்திய அரசின் பல்வேறு விருதுகளை பெற்றுள்ளோம். வந்த 9 மாதத்தில் திராவிட மாடலில் என்ன செய்தார்கள்.

    திருமண உதவி திட்டம் கொண்டு வந்து ஏழை எளிய குடும்பத்தில் பிறந்த பெண்களுக்கு திருமணத்துக்கு தாலிக்கு தங்கம் வழங்கப்பட்டது. வேண்டுமென்றே ஜெயலலிதா கொண்டு வந்த திட்டம் என்பதற்காக திட்டத்தை நிறுத்தி உள்ளனர். அம்மா இருசக்கர வாகனம் திட்டத்தையும் இந்த அரசு நிறுத்தி உள்ளது.

    2021 தேர்தல் அறிக்கையில் 5 சவரனுக்கு குறைவாக கூட்டுறவு சங்கங்களில் வைத்த நகை கடன் தள்ளுபடி என அறிவித்து விட்டு, இன்று பல்வேறு விதிமுறைகளை அறிவித்து வருகின்றனர் என்று அவர் தெரிவித்துள்ளார்.
    Published by:Esakki Raja
    First published:

    Tags: TN Budget 2022

    அடுத்த செய்தி