• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • வேளாண் சட்டம் விலக்கிக்கொள்ளப்பட்டது நல்ல விஷயம் - வி.கே.சசிகலா

வேளாண் சட்டம் விலக்கிக்கொள்ளப்பட்டது நல்ல விஷயம் - வி.கே.சசிகலா

Sasikala

Sasikala

பொது மக்களுக்கு அரிசி பருப்பு அடங்கிய மளிகை பொருட்கள், புடவை உள்ளிட்ட பல்வேறு நிவாரண பொருட்களை சசிகலா வழங்கினார்.

  • Share this:
    சென்னையில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்களை வி.கே.சசிகலா வழங்கினார்.

    சென்னையில் கடந்த இரு வாரத்திற்கு முன்னதாக ஏற்பட்ட கனமழையின் காரணமாக பல்வேறு தாழ்வான பகுதிகளில் உள்ள குடியிருப்புகளில் வெள்ள நீர் புகுந்து மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. இந்நிலையில் வெள்ளநீர் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு ஒவ்வொரு அரசியல் கட்சிகளின் தலைவர்களும் நேரடியாக சென்று பார்வையிட்டு பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கினர்.

    அந்த வகையில் கடந்த 12ம் தேதி வி.கே. சசிகலா சென்னையில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தி.நகர் வள்ளுவர்கோட்டம், கோயம்பேடு உள்ளிட்ட இடங்களில் வெள்ள சேதங்களை பார்வையிட்டு அங்குள்ள மக்களுக்கு நிவாரணப் பொருட்களை வழங்கினார். அதன் தொடர்ச்சியாக இன்று பெசன்ட் நகரில் உள்ள ஊரூர் குப்பம், அடையாறு, இந்திரா நகர் ஐஸ்வர்யா காலனி நீலாங்கரையில் உள்ள அறிஞர் அண்ணா நகர், ஆகிய இடங்களில் பொது மக்களை சந்தித்து ஒவ்வொரு இடங்களிலும் 300 க்கும் மேற்பட்ட பொது மக்களுக்கு அரிசி பருப்பு அடங்கிய மளிகை பொருட்கள், புடவை உள்ளிட்ட பல்வேறு நிவாரண பொருட்களை சசிகலா வழங்கினார்.

    Also read:  ஒரு நாள் முழுதும் ஐஸ் பாக்ஸில் இருந்தும் உயிருடன் மீண்ட நபர்.. இறந்தவர் உயிர்பிழைத்தது எப்படி?

    சசிகலா பேட்டி :

    வேளச்சேரி அம்பேத்கார் காலனி பகுதியில் மழைநீரால் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து நிவாரணப் பொருட்களை வழங்கிய சசிகலா செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, வீடுகள் இடிந்தது மழை வெள்ளத்தில் மக்களே அடித்துச் செல்லும் நிலை உள்ளது என்றார்.

    இந்த மழைக்காலத்தில் அரசு சரிவர செயல்படவில்லை என்ற எண்ணம் தோன்றுகிறது.  வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை அரசு காப்பாற்ற வேண்டும். வீடுகளை இழந்த மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்க வேண்டும்.

    டெல்டா மாவட்டங்களில் பயிர் நாசமாகியுள்ளது அவர்கள் மிகவும் துன்பத்தில் உள்ளனர். அவர்களுக்கு தேவையான உதவிகளை அரசு செய்ய வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

    பாதிப்புகளுக்கு ஏற்ப இழப்பீடுகளை அரசு வழங்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். வேளாண் சட்டம் விலக்கிக்கொள்ளப்பட்டது நல்ல விஷயம்தான். விவசாயிகள் கேட்டுக்கொண்டதற்கிணங்க வேளாண் சட்டம் விலக்கிக்கொள்ளப்பட்டது நல்லதுதான் என்று தெரிவித்தார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Arun
    First published: