அரசு துறைகளில் கோலோச்சும் வேளாண் பட்டதாரிகள்.. இறையன்பு, அமுதா ஐஏஎஸ், சைலேந்திரபாபு ஐபிஎஸ்.. நீளும் பட்டியல்

அரசு நிர்வாகத்தில் வேளாண் பட்டதாரிகள்!

விவசாய பட்டம் பெற்ற பலர், ஐஏஎஸ், ஐபிஎஸ் என தேர்ச்சி பெற்று அரசு நிர்வாகத்தில் கோலோச்சி வருகின்றனர்.

  • Share this:
தமிழக காவல்துறை டிஜிபி-யாக நியமிக்கப்பட்டுள்ள சைலேந்திர பாபு வேளாண்மை பட்டதாரி ஆவர். இவர் மட்டுமல்லாமல், தமிழக அரசு நிர்வாகத்தில் தலைமைச் செயலர் உள்ளிட்ட முக்கிய பதவிகளை வகிக்கும் ஐ.ஏ.எஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் பலர் வேளாண்மை பட்டதாரிகள்தான். அது குறித்த செய்தியை பார்க்கலாம்..

கோவை விவசாயக் கல்லூரியையும், மதுரை விவசாயக் கல்லூரியையும் ஒன்றிணைத்து கோவையில் 1971ல் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தை தொடங்கினார் அப்போதைய முதல்வர் கருணாநிதி. இந்த பல்கலைக்கழகத்திற்கு இது பொன்விழா ஆண்டு. இப்பல்கலையிலும் இதன் கீழ் தமிழகம் முழுவதும் செயல்படும் கல்லூரிகளிலும் பயின்ற பலர் வேளாண் விஞ்ஞானிகளாக உருவெடுத்தனர். அவர்களில் எம்.எஸ்.சுவாமிநாதன், சிவக்குமார் வீராசாமி, தென்கச்சி சாமிநாதன் போன்றவர்கள் குறிப்பிடத்தக்கவர்கள். எனினும் இதில் பயின்று விவசாய பட்டம் பெற்ற பலர், ஐஏஎஸ், ஐபிஎஸ் என தேர்ச்சி பெற்று அரசு நிர்வாகத்தில் கோலோச்சி வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

குறிப்பாக, முந்தைய ஆட்சியில் தலைமைச் செயலராக இருந்த சண்முகம், கோவை வேளாண் பல்கலையில் விவசாய பட்டம் பெற்றவர் தான். தற்போதைய தலைமைச் செயலாளர் இறையன்புவும் கோவை வேளாண் பல்கலையில் பயின்று பட்டம் பெற்றவர். இதேபோல், முந்தைய முதல்வரின் செயலர் பொதுத்துறை செயலர் உள்ளிட்ட பதவிகளை வகித்து, தற்போது மக்கள் நல்வாழ்வுத்துறை சிறப்பு செயலராக உள்ள செந்தில்குமார் ஐஏஎஸ், மதுரை வேளாண் கல்லூரியில் பட்டம் பெற்றவர்.

Also Read: Sylendra Babu: சைக்கிள் காதலன்: புதிய டிஜிபியாக நியமிக்கப்பட்டுள்ள சைலேந்திரபாபு கடந்து வந்த பாதை!

அதேபோல், செய்தி மற்றும் விளம்பரத் துறையின் இயக்குநராக உள்ள ஜெயசீலன் ஐஏஎஸ்.சும் மதுரை வேளாண் கல்லூரியில் பட்டம் பெற்றவர். மேலும், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தின் மேலாண்மை இயக்குநராக உள்ள ராஜாராமன் ஐஏஎஸ், சிதம்பரம் அண்ணாமலை பல்கலையில் விவசாய பட்டம் பெற்றவர்.



இதே போல், விவசாய பட்டம் பெற்ற ஐ.பி.எஸ் அதிகாரிகள் பலர் தமிழக காவல் பணியில் முக்கிய நிர்வாக பொறுப்பில் உள்ளனர். அதில் முக்கியமானவரும் தமிழக டிஜிபியாக நியமிக்கப்பட்டு இருப்பவருமான சைலேந்திர பாபு, மதுரை வேளாண் கல்லூரியில் பயின்றவர். காவல்துறை நிர்வாகத்தின் கூடுதல் டிஜிபியான எம்.ரவியும் மதுரை வேளாண் கல்லூரி பட்டதாரி ஆவார். மத்திய மண்டல ஐ.ஜி.யாக உள்ள பாலகிருஷ்ணனும் மதுரை வேளாண் கல்லூரி பட்டதாரி. தமிழ்நாடு அரசின் கூடுதல் டி.ஜி.பி.,யான ஜெயந்த் முரளி, கோவை வேளாண் பல்கலைக்கழத்தில் பட்டம் பெற்றவர்.

Also Read: வதந்திகளை நம்பாதீங்க.. இப்பதான் அரசியல் பக்குவம் வந்திருக்கு - கொரோனா தொற்றால் வீட்டு தனிமையில் ராஜேந்திர பாலாஜி

பொருளாதார குற்றப்பிரிவு ஐ.ஜி.யாக உள்ள ஆர்.தினகரனும் கோவை வேளாண் பல்கலைக்கழத்தில் பட்டம் பெற்றவர்.சென்னையில் கூடுதல் ஆணையராக உள்ள ஜெ. லோகநாதனும் கோவை வேளாண் பல்கலைக்கழத்தில் விவசாய பட்டம் பெற்றவர் ஆவார். தெற்கு மண்டல ஐ.ஜி.,யான டி.எஸ்.அன்பு, சிதம்பரம் அண்ணாமலை பல்கலையில் விவசாய பட்டம் பெற்றவர். தற்போது பிரதமர் அலுவலகப் பணியில் உள்ள அமுதா, மதுரை வேளாண் கல்லூரியில் 1987 முதல் 1991 வரை படித்தவர்.



உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
Published by:Ramprasath H
First published: