முகப்பு /செய்தி /தமிழ்நாடு / இன்று 10 இடங்களில் சதம் அடித்த வெயில்... நாளையோடு அக்னி நட்சத்திரம் முடிகிறது

இன்று 10 இடங்களில் சதம் அடித்த வெயில்... நாளையோடு அக்னி நட்சத்திரம் முடிகிறது

வெயில் அளவு

வெயில் அளவு

அக்னி நட்சத்திரம் முடிந்தாலும் அடுத்த சில நாட்களுக்கு வெயிலின் தாக்கம் அதிகமாகவே இருக்கும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. இதனை மெய்பிக்கும் வகையில் கடந்த 24 மணி நேரத்தில் 10 இடங்களுக்கும்  மேலே 100 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் கொளுத்தியது. 

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

கத்திரி வெயில் எனப்படும் அக்னி நட்சத்திரம் நாளையுடன் நிறைவுபெறுகிறது. இந்நிலையில், தமிழகத்தின் 10 இடங்களில் இன்று 100 டிகிரி ஃபேரன்ஹீட்டை தாண்டி வெயில் பதிவானது.

தமிழகத்தில் அக்னி நட்சத்திர வெயில் காலம் கடந்த மே 4ம் தேதி தொடங்கியது. அதற்கு முன்பாகவே வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில், அக்னி நட்சத்திரத்தில் இன்னும் அதிகமாக வெயில் பதிவாகக் கூடும் என மக்கள் மத்தியில் அச்சம் நிலவியது. கத்திரி வெயில் தொடங்கியதுமே தமிழகத்தின் ஒருசில பகுதிகளில் மழை பெய்தது. இது மக்களை சற்றே மகிழ்ச்சி அடைய செய்தது.

ஆசானி புயல் மற்றும் வானிலை மாற்றம் காரணமாக பெரும்பாலான பகுதிகளில் அக்னி நட்சத்திர காலத்தில் மழை எப்ய்தது. இதை தொடர்ந்து வரண்ட வானிலை நிலவத் தொடங்கியது. கடந்த சில நாட்களாக சென்னை உள்ளிட்ட பல பகுதிகளில் கடுமையான வெயில் பதிவாகி வருகிறது. இந்நிலையில், அக்னி நட்சத்திரம் நாளையோடு ஓய்வு பெறுகிறது.

அக்னி நட்சத்திரம் முடிந்தாலும் அடுத்த சில நாட்களுக்கு வெயிலின் தாக்கம் அதிகமாகவே இருக்கும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. இதனை மெய்பிக்கும் வகையில் கடந்த 24 மணி நேரத்தில் 10 இடங்களுக்கும்  மேலே 100 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் கொளுத்தியது.

அதிகபட்சமாக கரூர் பரமத்தியில் 104.60 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் பதிவானது. கடலூரில் 104.18 டிகிரி ஃபாரன்ஹீட்டும், சென்னை மீனம்பாக்கத்தில் 102.38 டிகிரி ஃபாரன்ஹீட்டும்,  திருச்சியில் 101.48 டிகிரி ஃபாரன்ஹீட்டும் சென்னை நுங்கம்பாக்கம் மற்றும் புதுச்சேரியில் 100.94 டிஹிரி ஃபாரன்ஹீட் வெயிலும் பதிவானது.

First published:

Tags: Heat Wave, Summer