ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

அக்னிபத் திட்டத்துக்கு எதிராக போராட்டம்: பிளாட்பார்ம் டிக்கெட் வழங்குவது நிறுத்திய தெற்கு ரயில்வே

அக்னிபத் திட்டத்துக்கு எதிராக போராட்டம்: பிளாட்பார்ம் டிக்கெட் வழங்குவது நிறுத்திய தெற்கு ரயில்வே

பிளாட்பார்ம்

பிளாட்பார்ம்

Platform ticket : அக்னிபாத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில், தெற்கு ரயில்வே முழுவதும் பிளாட்பார்ம் டிக்கெட் வழங்குவது நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :

  முப்படைகளில் இளைஞர்கள் 4 ஆண்டுகள் பணிபுரியக் கூடிய அக்னிபாத் திட்டத்தை மத்திய அரசு அறிவித்துள்ளது. இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து நாடெங்கும் இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பல்வேறு இடங்களில் வன்முறை சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன.

  போராட்டங்கள் வலுத்துள்ள நிலையில், டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த ராணுவ விவகாரங்கள் துறை கூடுதல் செயலாளர் அனில் பூரி, இந்த திட்டம் குறித்து பல்வேறு விளக்கங்களை அளித்தார். நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த பரிந்துரைகளின் அடிப்படையிலேயே இந்த சீர்திருத்தம் மேற்கொள்ளப்பட்டிருப்பதாகத் தெரிவித்தார்.

  தற்போது 46,000 பேர் என்ற அளவில் நியமிக்கப்படும் அக்னிபாத் வீரர்களின் எண்ணிக்கை, நான்கைந்து ஆண்டுகளில் ஒன்றே கால் லட்சமாக உயரும் என்று கூறினார். மேலும் அக்னி வீரர்களுக்கு வெவ்வேறு துறைகளின் சார்பாக அறிவிக்கப்பட்டுள்ள இட ஒதுக்கீடு ஏற்கனவே திட்டமிடப்பட்டது என்றும் கூறினார்.

  இவை போராட்டங்களின் விளைவாக வெளியான அறிவிப்புகள் அல்ல என்றும் தெரிவித்த அனில் பூரி, அக்னிபாத் திட்டத்திற்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு ராணுவத்தில் இடமில்லை என்று கூறிய அவர், இந்த திட்டத்தில் சேருவோர், தாங்கள் கலவரத்தில் ஈடுபடவில்லை என காவல்துறையிடம் சான்றிதழ் பெற வேண்டும் என்றும் தெரிவித்தார்.

  இந்நிலையில், டிசம்பர் முதல் வாரத்தில் முதல் கட்டமாக 25 ஆயிரம் அக்னி வீரர்கள் சேர்க்கப்படுவார்கள் என்றும், அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் அக்னி வீரர்களின் எண்ணிக்கை 40 ஆயிரமாக உயரும் என்றும் லெப்டினண்ட் ஜெனரல் பன்சி போனப்பா கூறியுள்ளார். முதல் கடற்படை 'அக்னிவீரர்கள்’ குழு இந்த ஆண்டு நவம்பர் 21 ஆம் தேதி முதல், ஒடிசாவில் உள்ள ஐஎன்எஸ் சில்கா பயிற்சி மையத்தில் பயிற்சி பெறத் தொடங்குவார்கள் என துணை அட்மிரல் தினேஷ் திரிபாதி தெரிவித்துள்ளார். இந்த குழுவில் ஆண் மற்றும் பெண் அக்னி வீரர்கள் இடம்பெறுவார்கள் என்றும் அவர் கூறியுள்ளார்.

  விமானப்படையில் அக்னிவீரர்களுக்கான பதிவு ஜூன் 24 முதல் ஜூலை 24 வரை நடைபெறும் என்றும், முதற்கட்டமாக ஆன்லைன் தேர்வு நடைபெறும் என்றும் ஏர் மார்ஷல் எஸ்கே ஜா தெரிவித்துள்ளார். டிசம்பரில் 30 ஆம் தேதியில் இருந்து முதல் தொகுப்பு வீரர்கள் பயிற்சியைத் தொடங்குவார்கள் என்றும் அவர் கூறியுள்ளார்.

  இந்நிலையில், அக்னிபத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. அக்னிபாத் திட்டத்துக்கு எதிராக நாடு முழுவதும் போராட்டக் குழுக்கள் இன்று முழு அடைப்புக்கு அழைப்பு விடுத்துள்ளதால் பல்வேறு மாநிலங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  சென்னையில் சனிக்கிழமை போராட்டம் நடைபெற்ற நிலையில் பாதுகாப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. சென்னை தலைமை செயலகத்தை நோக்கி செல்லும் சாலைகளில் அவசர தேவைகளை தவிர்த்து பொது போக்குவரத்து நிறுத்தப்பட்டது. சென்னை சென்ட்ரல் மற்றும் எழும்பூர் ரயில் நிலையங்களில் ரயில்வே போலீசார் 2 அடுக்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் சென்னையில் முக்கிய பகுதிகளில் ஆங்காங்கே தடுப்புகள் அமைத்து காவல்துறையினர் கண்காணித்து வருகிறனர்.

  இந்நிலையில், நாடு தழுவிய வேலை நிறுத்தத்திற்கு (Bharath Bandh) முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதை கருத்தில் கொண்டு, ரயில் பயணிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்த, தெற்கு ரயில்வே, சென்னை கோட்டத்தில் இருக்கும் அனைத்து ரயில் நிலையங்களிலும், அடுத்த அறிவிப்பு வரும்வரை நடைமேடை டிக்கெட்டுகள் (Platform tickets) வழங்குவது உடனடியாக நிறுத்தப்பட்டுள்ளது

  Must Read : 10ம் வகுப்பு தேர்வு முடிவுகளை எளிமையாக தெரிந்துகொள்வது எப்படி?

  அக்னிபத் போராட்டம் காரணமாக நாட்டின் பல ரயில் நிலையங்களில், ரயில் எரிப்பு உள்ளிட்ட வன்முறை சம்பவங்கள் நடைபெறும் நிலையில், தென்னக ரயில்வே இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. ரயில் பயணிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும், ரயில்வே சொத்துக்கள் சேதமாவதை தவிர்க்கவும், ரயில்வே நிர்வாகத்துக்கு ஒத்துழைப்பு தருமாறு பயணிகளையும் பொதுமக்களையும் கேட்டுக் கொள்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

  Published by:Suresh V
  First published:

  Tags: Agnipath, Protest, Southern railway, Train