மனித வள மேலாண்மைத் துறை சார்பில் அத்துறையின் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பல்வேறு அறிவிப்புகளை இன்று வெளியிட்டார். அதில், நேரடி நியமன வயது உச்சவரம்பு உயர்த்தப்படுவது தொடர்பான அறிவிப்பும் இடம்பெற்றுள்ளது.
தமிழக சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டத் தொடரின் நிறைவு நாளான இன்று மனித வள மேலாண்மைத் துறை சார்பில் அத்துறையின் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அறிவிப்புகளை வெளியிட்டார். அதன்படி, தமிழக அரசுத் துறைகளில் உள்ள பணியிடங்கள் மற்றும் மாநில பொதுத்துறை நிறுவனங்களில் உள்ள பணி இடங்கள் அனைத்திலும் தமிழ் இளைஞர்களை 100% நியமனம் செய்யும் பொருட்டு தேர்வுகள் நடத்தப்படும்.
அனைத்து போட்டித் தேர்வுகளிலும் தமிழ் மொழி பாடம் தகுதி தேர்வில் கட்டாயமாக்கப்படும். வேலை வாய்ப்புகங்கள் வழியாக நிரப்பப்படுகின்றன அரசுப் பணியிடங்களில் கொரனோ தோற்றால் பெற்றோர் இருவரையும் இழந்த இளைஞர்கள், முதல் தலைமுறை பட்டதாரிகள். தமிழக அரசு பள்ளிகளில் தமிழ் மொழியில் பயின்ற நபர்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்கப்படும்.
இதையும் படிக்க: அதிமுக ஆதரவு.. பாஜக வெளிநடப்பு: நிறைவேறியது நீட் விலக்கு சட்ட மசோதா!
வயது உச்ச வரம்பு உயர்த்துதல்
கொரோனா பெருந்தொற்று காரணமாக பணியாளர் தெரிவு முகமைகளால் (Recruiting agencies) நடத்தப்படும் அரசு பணிகளுக்கான போட்டித் தேர்வுகள் தாமதமானதால், நேரடி நியமன வயது உச்ச வரம்பு இரண்டு ஆண்டுகளாக உயர்த்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: அரசு பணி நியமனங்களில் பெண்களுக்கு 40 சதவீத இட ஒதுக்கீடு - தமிழக அரசு திட்டம்
அகில இந்திய குடிமைப்பணி தேர்வு பயிற்சி மையம் மற்றும் ‘அ’ மற்றும் ‘ஆ’ பிரிவு அடிப்படை பயிற்சி நிலையத்தில் கணினி ஆய்வகத்தின் பதிப்பிக்கும் பொருட்டு என்பது ஒரு லட்ச ரூபாய் செலவில் கணினி அச்சுப்பொறி மற்றும் உபகரணங்கள் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில்
நியூஸ்18 தமிழ் இணையதளத்தை
இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்..
செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.