இணையத்தில் பட்டாசு விற்பனை செய்வோர் மீது நடவடிக்கை எடுங்கள்... வணிகர் சங்கம் வலியுறுத்தல்

பட்டாசு வெடிப்பதற்கு காலையும் மாலையும் நேரம் ஒதுக்கப்பட்டிருந்தாலும் மழையின் காரணமாக அது பாதிக்கபடலாம் என்பதால் விதிகளை சற்று தளர்த்தி பொதுமக்களுக்கு காவல்துறை உதவ வேண்டும்.

இணையத்தில் பட்டாசு விற்பனை செய்வோர் மீது  நடவடிக்கை  எடுங்கள்... வணிகர் சங்கம் வலியுறுத்தல்
இணையத்தில் சட்டவிரோதமாக பட்டாசு விற்பனை
  • News18
  • Last Updated: October 23, 2019, 10:31 PM IST
  • Share this:
இணையத்தில் சட்டவிரோதமாக பட்டாசு விற்பனை செய்பவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்புத் தலைவர் விக்ரமராஜா வலியுறுத்தியுள்ளார்.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் ஜார்ஜ் டவுன் அனைத்து வியாபாரிகள் சங்கம் சார்பில் பட்டாசு விற்பனை கண்காட்சி துவங்கியது.

இந்த கண்காட்சியை தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்புத் தலைவர் விக்ரமராஜா துவக்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர் “கடந்த ஆண்டை விட பட்டாசு விற்பனை இந்த ஆண்டு கடும் வீழ்ச்சியைக் கண்டுள்ளதாக தெரிவித்தார்.


மேலும், ஒருபுறம் வாங்கிய கடனை திரும்ப செலுத்த முடியாத நிலைக்கு ஆளானதாலும் மறுபுறம் பட்டாசு வெடிப்பதற்கு விதித்துள்ள கடுமையான விதிமுறைகளின் காரணத்தாலும் பட்டாசு வியாபாரிகள் இந்த நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக வருத்தம் தெரிவித்தார்.தொடர்ந்து பேசிய அவர், ”இணையவழி பட்டாசு விற்பனையை நீதிமன்றம் தடை விதித்தும் பலர் சட்டவிரோதமாக இணையத்தில் பட்டாசு விற்பனை செய்து வருவதாக தெரிவித்த அவர், சட்டவிரோதமாக இணையவழி பட்டாசு வியாபாரம் செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்” என கேட்டுக்கொண்டார்.மேலும், பட்டாசு வெடிப்பதற்கு காலையும் மாலையும் நேரம் ஒதுக்கப்பட்டிருந்தாலும் மழையின் காரணமாக அது பாதிக்கபடலாம் என்பதால் விதிகளை சற்று தளர்த்தி பொதுமக்களுக்கு காவல்துறை உதவ வேண்டும் எனவும் அவர் வேண்டுகோள் விடுத்தார்.

பார்க்க :

பிகிலுக்கு தொடரும் சிக்கல்…. ரசிகர்களுக்கு பணத்தை திருப்பி ஒப்படைக்க அமைச்சர் அறிவுரை

First published: October 23, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading