கடலுார் மாவட்டம், விருத்தாசலத்தை அடுத்த மணவாளநல்லுாரில் அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் புகழ்பெற்ற கொளஞ்சியப்பர் சுவாமி கோவில் உள்ளது. கொரோனா ஊரடங்கு அமலில் இருப்பதால் பக்தர்கள் தரிசனத்திற்கு தடை இருக்கிறது. வழக்கமான பூஜைகள், துப்புரவு பணிகளை மேற்கொள்ள அறநிலையத்துறை ஊழியர்களுக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.
இந்நிலையில், கோவிலில் பணிபுரியும் கோவில் பொறுப்பு மேலாளர் சிவராஜன், காவலர் சிவக்குமார் இருவரும் அங்குள்ள நந்தவனத்தில் அமர்ந்து மது அருந்தியபடி, மாமிசம் சாப்பிடுகின்றனர். போதை தலைக்கேறிய சிலர், புகைப்பதும், அங்கேயே இயற்கை உபாதையை கழிக்கின்றனர். இந்த காட்சிகள் அடங்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது.
ஊரடங்கால் மூன்று மாதங்களுக்கு மேலாக கோவிலுக்குள் செல்ல முடியாமல் தவித்து வரும் நிலையில், கோவில் ஊழியர்களின் செயலை கண்டு பக்தர்கள் அதிர்ச்சிடைந்தனர். இந்த நிலையில் கோவில் வளாகத்தில் மது அருந்திய விவகாரம் தொடர்பாக
கோவில் பொறுப்பு மேலாளர் சிவராஜன், காவலர் சிவக்குமார் இருவரும் பணியிடை நீக்கம் செய்து விழுப்புரம் இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் செந்தில்வேலன் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Cuddalore