• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • ஸ்டெர்லைட் ஆலையை மூடிய பிறகு காற்றின் தரம் உயர்ந்துள்ளது...! சென்னை ஆதரவுக் குழு

ஸ்டெர்லைட் ஆலையை மூடிய பிறகு காற்றின் தரம் உயர்ந்துள்ளது...! சென்னை ஆதரவுக் குழு

கோப்புப் படம்

கோப்புப் படம்

  • News18
  • Last Updated :
  • Share this:
ஸ்டெர்லைட் ஆலையை மூடிய பிறகு குறிப்பிடத்தகுந்த வகையில் தூத்துக்குடியில் காற்றின் தரம் உயர்ந்துள்ளதாக சென்னை ஆதரவுக் குழு தெரிவித்துள்ளது.

தமிழ் நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் காற்று சோதனை தரவுகளின் அடிப்படையில் காற்றில் மாசுபாடு குறைந்ததாக சென்னை ஆதரவுக் குழு விடுத்த அறிக்கை மூலம் தெரிய வந்துள்ளது.

ஏப்ரல் மாதம் 2018-ல் ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டது. இது தொடர்பான வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலை மூடிய பிறகு காற்று மாசு குறிப்பிடத்தக்க வகையில் குறைந்திருப்பதாக மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் தேசிய காற்று தர கண்காணிப்பு திட்டத்தின் கீழ் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்தால் இயக்கப்பட்டு வரும் மூன்று நிலையங்களிலிருந்து பெறப்பட்ட தரவுகள் வழியாக தெரிய வந்துள்ளது.

தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் தரவுகளின் படி ஸ்டெர்லைட் இருக்கும் சிப்காட் தொழிற் வளாகத்தில் ஆரோக்கியமற்ற காற்று வீசும் நாட்களின் எண்ணிக்கை ஸ்டெர்லைட் ஆலை மூடியபிறகு பாதிக்கு பாதி குறைந்திருப்பதாக சென்னை ஆதரவுக் குழு தெரிவித்துள்ளது.

ஸ்டெர்லைட் ஆலை இயக்கப்பட்டு வந்த ஏப்ரல் 2017 தொடங்கி மார்ச் 2018-ம் ஆண்டு வரையிலான காலக்கட்டத்தில் காற்றின் தரம் 56 சதவிகித நாட்களில் ஆரோக்கியமற்று இருந்தது.

ஆலை செயல்படாமல் இருந்த ஏப்ரல் 2018 தொடங்கி மார்ச் 2019-ம் ஆண்டு வரை இந்த அளவு 27 சதவிகிதமாக குறைந்துள்ளது எனவும் சென்னை ஆதரவுக் குழு தெரிவித்துள்ளது.

ஸ்டெர்லைட் ஆலை மூடப்படுவதற்கு முந்தைய ஓராண்டும் ஆலையை மூடியதற்கு பின்னரான ஓராண்டும்,  ஏற்றுக்கொள்ளத்தக்க வகையில் காற்றின் அளவு இருந்த நாட்கள் 44 சதவிகிதத்திலிருந்து ஸ்டெர்லைட் மூடப்பட்ட பிறகு 73 சதவிகிதமாக அதிகரித்துள்ளதாக சென்னை ஆதரவுக்குழு தெரிவித்துள்ளது.

ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க வலியுறுத்தி சென்னை உயர்நீதிமன்றத்தில் வேதாந்தா நிறுவனம் தொடுத்த வழக்கு விசாரணைக்கு வரும் எனக் கூறப்படுகிறது.

இது தொடர்பாக வேதாந்தா நிறுவனத்தின் கருத்தைப் பெற மின்னஞ்சல் மூலமாக தொடர்பு கொள்ளப்பட்டுள்ளது. வேதாந்தா நிறுவனத்திடம் இருந்து பதில் பெறப்பட்டவுடன் இந்த கட்டுரையில் இணைக்கப்படும்.

Also see...

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vinothini Aandisamy
First published: