தமிழகம் முழுவதும் பேனர்களை அகற்றும் பணிகள் தீவிரம்!

தமிழகம் முழுவதும் பேனர்களை அகற்றும் பணிகள் தீவிரம்!
மாதிரிப் படம்
  • News18 Tamil
  • Last Updated: September 14, 2019, 9:46 PM IST
  • Share this:
பேனர் விழுந்து இளம்பெண் உயிரிழந்ததைத் தொடர்ந்து, தமிழகம் முழுவதும் பேனர்களை அகற்றும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. 

சென்னை பள்ளிக்கரணையில் திருமணம் ஒன்றிற்காக வைக்கப்பட்ட பேனர், விழுந்து இளம் பெண் சுபஸ்ரீ உயிரிழந்தார். இதையடுத்து, மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில், பேனர்களை வைக்கக் கூடாது என்று அதிமுக-வினருக்கு ஓபிஎஸ், இபிஎஸ்-ஸும், திமுக-வினருக்கு மு.க.ஸ்டாலினும் வலியுறுத்தியுள்ளனர்.

சென்னையில் தேமுதிக-வின் 15-வது ஆண்டு தொடக்க விழா நடைபெற்றது. இதையொட்டி, கோயம்பேட்டில் உள்ள கட்சி அலுவலகம் அருகே பேனர்கள் வைக்கப்பட்டிருந்தன. அனுமதியின்றி வைக்கப்பட்டிருந்த இந்த பேனர்களை மாநகராட்சி அதிகாரிகள் அகற்றினர்.


பொதுமக்களுக்கு இடையூறாக பேனர் வைத்ததாக திருவாரூர் மாவட்டத்தில் 14 பேர் மீதும், ஈரோடு மாவட்டத்தில் 99 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

புதுச்சேரியில் பேனர்களை வைக்க மாட்டோம் என்று பாஜக மாநிலத் தலைவர் சாமிநாதன் அறிவித்திருந்தார். இதனைத் தொடர்ந்து, பிரதமர் பிறந்த நாளையொட்டி வைக்கப்பட்டிருந்த பேனர்களை பாஜக-வினர் அகற்றினர்.

இந்நிலையில், திரையரங்குகளில் வரையறுக்கப்பட்ட பகுதியில் மட்டும் பேனர் வைக்கப்படுகின்றதா என கண்காணிக்கப்படும் என்று செய்தித் துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.Watch Also:
First published: September 14, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்
corona virus btn
corona virus btn
Loading