தேசிய பொறுப்பு; பல்வேறு மொழிகளைக் கற்று பேசி அசத்தும் வானதி சீனிவாசன்!

தேசிய பொறுப்பு; பல்வேறு மொழிகளைக் கற்று அசத்தும் வானதி சீனிவாசன்!

டெல்லியில் நடைபெற்ற பிரதமருடனான சந்திப்பின் போது கூட இந்தி கற்றுக் கொண்டு வருவதாக பிரதமரிடம் தெரிவித்தார். அதனை பிரதமர் பாராட்டினார்.

  • Share this:
பாஜக மகளிரணி தேசியத் தலைவர் மற்றும் கோவை தெற்கு தொகுதியின் சட்டமன்ற உறுப்பினரான வானதி சீனிவாசன் இந்தி மொழி கற்றுக் கொள்வதோடு மட்டுமல்லாமல் குஜராத்தி மொழியில் பேசி அசத்தி வருகிறார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அகில இந்திய பொறுப்பில் பதவியேற்ற பிறகு பல்வேறு மொழிகளைக் கற்கும் முயற்சியில் வானதி சீனிவாசன் இறங்கியுள்ளார்.

முதற்கட்டமாக இந்தியில் ஆற்றலை வளர்த்துக் கொண்டு பல்வேறு மாநிலங்களில் மகளிர் அணி கூட்டத்தில் பேசுவதற்கான பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறார்.

Also read: பிரதமர் மோடி மக்களின் மனதை புரிந்திருந்தால்.. இப்படி நடந்திருக்காது; ராகுல் காந்தி

சமீபத்தில் டெல்லியில் நடைபெற்ற பிரதமருடனான சந்திப்பின் போது கூட இந்தி கற்றுக் கொண்டு வருவதாக பிரதமரிடம் தெரிவித்தார். அதனை பிரதமர் பாராட்டினார்.

குறிப்பாக கடந்த வருடம் மகளிரணி தேசியத் தலைவராக வானதி சீனிவாசன் தேர்ந்தெடுக்கப்பட்டார். இதன் காரணமாக இந்தியா முழுவதும் நடைபெறும் ஆலோசனைக் கூட்டங்களுக்கு நேரடியாக பங்கேற்கிறார்.

அவரை பல்வேறு நிகழ்ச்சிகளில் சிறப்பு விருந்தினராக அழைக்கின்றனர். இதன் காரணமாக பல்வேறு மொழிகளில் துவக்க உரையில் ஒரு சில வார்த்தைகளில் பேசத் துவங்குகிறார் வானதி சீனிவாசன்.

Also read: கிறிஸ்துவர்கள் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பதை சர்ச்சுகள் தீர்மானிக்கிறது; அர்ஜூன் சம்பத்

பெரும்பாலும் ஆங்கிலம் அல்லது இந்தி உள்ளிட்ட மொழிகளில் பேசினாலும், அதைவிட  ஒவ்வொரு மாநில மொழிகளிலும் பேசும்போது அந்த மாநில நிர்வாகிகளுடன் கூடுதல் கவனத்தை ஏற்படுத்தி கட்சியை பலப்படுத்த முடியும் என வானதி சீனிவாசன் நம்புகிறார்.

எனவே குஜராத் மாநிலத்தில் நடைபெறும் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற அவர் குஜராத்தி மொழியில் எழுதி வைத்துக் கொண்டு அதை மேடையில் பேசினார்.

இதன் காரணமாக இந்தி மட்டுமல்லாமல் குஜராத்தி மத்தியிலும் அவர் பேசிய காட்சிகள் தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது.
Published by:Esakki Raja
First published: