முகப்பு /செய்தி /தமிழ்நாடு / ஐ.எஸ். அமைப்பினர் சதித்திட்டம்: கடலூர் சிறைக்கு பலத்த பாதுகாப்பு!

ஐ.எஸ். அமைப்பினர் சதித்திட்டம்: கடலூர் சிறைக்கு பலத்த பாதுகாப்பு!

கோப்புப் படம்

கோப்புப் படம்

  • Last Updated :

கடலூர் மத்திய சிறையினை, .எஸ். பயங்கரவாத அமைப்பினர் தகர்க்கப்போவதாக வந்த தகவலையடுத்து, இரண்டாவது நாளாக பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. 

ஐ.எஸ். பயங்கரவாத அமைப்புக்கு, நிதி திரட்டி கொடுத்ததாக கைது செய்யப்பட்டுள்ள அன்சர் மீரான் என்பவர், புழல் சிறையில் உல்லாச வாழ்க்கை வாழ்ந்ததாக வந்த படத்தை தொடர்ந்து, கடலூர் மத்திய சிறைக்கு மாற்றப்பட்டார். இந்நிலையில், கடலூர் மத்திய சிறைச்சாலையை ஐ.எஸ். அமைப்பினர் தகர்த்து, அன்சர் மீரானை மீட்கபோவதாக, மத்திய உளவுத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதனையடுத்து, இரண்டாவது நாளாக, கடலூர் சிறையினை சுற்றி 5 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.  சிறைத்துறை திருச்சி சரக டி.ஐ.ஜி. சன்முகசுந்தரம் தலைமையில் தீவிர சோதனை நடைபெற்றது. சிறை வளாகத்தை சுற்றிலும் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணிகளில் உள்ளனர். கடலூர் ஆயுதப்படை போலீசார் 300 க்கு மேற்பட்டோர்,  தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

முன்னதாக நேற்று ஆய்வின் போது கைதி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நடைபெற்றது. இதுதொடர்பாக போலீசார் தனி விசாரணை நடத்தி வருகின்றனர்.

ALSO READ...

கடலூர் சிறையில் அதிகாரிகள் ஆய்வின்போது சடலமாக மீட்கப்பட்ட கைதி!

ALSO WATCH...

top videos

    ' isDesktop="true" id="57317" youtubeid="F5rzlW6Z5NE" category="tamil-nadu">

    First published:

    Tags: Attack, Cuddalore central jail, Intelligence report, ISIS plan, Security tightened