ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

கேரம் போர்டு வீடியோவால் எதிர்கொண்ட கேலிகள்...! இதையும் பாருங்கள் என திருப்பூர் வாசிகள் பகிரும் வீடியோ

கேரம் போர்டு வீடியோவால் எதிர்கொண்ட கேலிகள்...! இதையும் பாருங்கள் என திருப்பூர் வாசிகள் பகிரும் வீடியோ

News 18

News 18

"திருப்பூரின் பெருமையை சொல்லும் விதமாகவும், தொழிலாளியாக வந்தவர்களும் முதலாளி ஆன நிதர்சனம் பற்றியும் அந்த வீடியோவில் உள்ளது”

  • News18
  • 1 minute read
  • Last Updated :

திருப்பூர் போலீசார் வெளியிட்ட கேரம் வீடியோவால் கிண்டல் கேலிக்கு ஆளான திருப்பூர்வாசிகள். திருப்பூரின் உழைப்பை சொல்லும் வீடியோவை பகிர்ந்து வருகின்றனர்.

திருப்பூர் காவல்துறையால் வெளியிடப்பட்ட வீடியோவில், ட்ரோன் மூலம் கண்காணிப்பில் ஈடுபட்டபோது கேரம் விளையாடும் இளைஞர்கள், ட்ரோனிடம் இருந்து தப்பிக்க ஓடுவதும், அதில் ஒரு இளைஞர் கேரம் போர்டை தலையில் தூக்கி கொண்டு ஓடி, பின் அதனையே தடுப்பாக வைத்து மறைந்து கொள்வதும் தமிழகம் முழுவதும் வைரலாக பரவியது. திருப்பூரை கேலி செய்வது போலவும் சமூக ஊடகங்களில் மீம்ஸ்கள் பகிரப்பட்டன.

இது திருப்பூரை சேர்ந்த மக்களிடையே மன வருத்தத்தை ஏற்படுத்தியது. மேலும் வெளியூரில் இருந்து கூட பலரும் போன் செய்து திருப்பூர்காரர்களை கிண்டலாக பேசியதாக, உள்ளூர் மக்கள் கூறுகின்றனர்.

இந்நிலையில், கேலிக்கும் கிண்டலுக்கும் உள்ளான வீடியோவுக்கு பதிலடியாக இன்று அனைத்து சமூக ஊடகங்களிலும் திருப்பூரின் உண்மையை கூறும் ஒரு காணொளி வைரலாக பரவி வருகிறது.

கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் எடுக்கப்பட்ட அந்த வீடியோ திருப்பூரின் பெருமையை சொல்லும் விதமாகவும், இங்கு தொழிலாளியாக வந்தவர்களும் முதலாளி ஆன நிதர்சனம் பற்றியும், உணவுக்கே வழி இன்றி வந்தோருக்கு இன்று மூன்றுவேளை உணவருந்த வேலை கொடுத்தது திருப்பூர் என அந்த காணொளி சொல்கிறது.

Also See: திருப்பூரில் கேரம் போர்டு... சேலத்தில் லுங்கி...! அடுத்த போலீஸ் ட்ரோன் வீடியோசீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.


Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube


First published:

Tags: Lockdown, Tiruppur