Home /News /tamil-nadu /

துபாயை தொடர்ந்து பல்வேறு நாடுகளில் இருந்து முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு அழைப்பு: அமைச்சர் தங்கம் தென்னரசு

துபாயை தொடர்ந்து பல்வேறு நாடுகளில் இருந்து முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு அழைப்பு: அமைச்சர் தங்கம் தென்னரசு

மு.க.ஸ்டாலின்

மு.க.ஸ்டாலின்

ஐக்கிய அமீரக அரபு நாடுகளைத் தொடந்து   பல்வேறு  நாடுகளில் இருந்தும் தமிழக முதலமைச்சருக்கு அழைப்பு வந்துள்ளதாகவும் ,  சூழ்நிலையையும் தேவையையும் பொறுத்து தமிழகத்திற்கு வரும் வாய்ப்புகளை தமிழக தொழில்துறை பயன்படுத்தும் என்றும் அமைச்சர் தங்கம் தென்னரசு கூறினார். 

மேலும் படிக்கவும் ...
துபாய் அபுதாபி பயணங்களைத் தொடர்ந்து பல்வேறு நாடுகளில் இருந்தும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு  அழைப்புகள் வந்துகொண்டிருக்கின்றன என்றும் தேவையையும் கால சூழ்நிலையையும் பொறுத்து அந்த வாய்ப்புகளை தமிழக தொழில்துறை பயன்படுத்தும் என உள்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  அந்நிய முதலீடுகளை ஈர்ப்பதற்காக கடந்த மார்ச் 24ஆம் தேதி ஐக்கிர அரபு அமீரகத்திற்குச் சென்றார். துபாய், அபுதாபி நாடுகளுக்குச் சென்ற அவர் இந்தப் பயணத்தின்போது முதலீட்டாளர்களைச் சந்தித்தார். இந்நிலையில், முதல்வரின் இந்த பயணத்தை தொடர்ந்து பல்வேறு நாடுகளும் தமிழகத்திற்கு அழைப்பு விடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதுகுறித்து நியூஸ் 18  தொலைக்காட்சிக்கு அமைச்சர் தங்கம் தென்னரசு அளித்த பிரத்யேக பேட்டியில்,  திமுக ஆட்சிக்கு வந்த 10 மாதங்களில் இதுவரை 130 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மூலம் 60,000 கோடி ரூபாய் அளவிற்கு  ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாகவும் இதன்மூலம் இரண்டு லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைப்பதற்கு வாய்ப்பு உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

கடந்த பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட புதிய காலணி தொழிற்சாலையை நாளை  திண்டிவனத்தில்  முதலமைச்சர் தொடங்கி வைக்க உள்ளதாக தெரிவித்த அவர்,  ஐக்கிய அமீரக அரபு நாடுகளைத் தொடந்து   பல்வேறு  நாடுகளில் இருந்தும் தமிழக முதலமைச்சருக்கு அழைப்பு வந்துள்ளதாகவும் ,  சூழ்நிலையையும் தேவையையும் பொறுத்து தமிழகத்திற்கு வரும் வாய்ப்புகளை தமிழக தொழில்துறை பயன்படுத்தும் என்றும் கூறினார்.

 

இதையும் படிங்க: 97 சதவீத நகைக்கடன் தள்ளுபடி செய்யப்பட்டுவிட்டன- கூட்டுறவு துறை அமைச்சர் பெரியசாமி



மேலும், எலக்ட்ரிக் பைக், வாகன உதிரி பாகங்கள் உள்ளிட்ட பல்வேறு துறைகள் உலகின் பல்வேறு நாடுகளிலும் இருக்கிறது, அதேபோல வெளிநாட்டு வாழ் தமிழர்களும் தமிழகத்தில் முதலீடு செய்வதற்கு மிகவும் ஆர்வமாக இருக்கின்றனர். இந்தியாவில் உள்ள பல்வேறு மாநிலங்களிலும் இருக்கக்கூடிய தொழில் நிறுவனங்கள் தமிழகத்தில் தொழில் தொடங்க ஆர்வமாக இருக்கின்றன, ஒரு நிலையான தொழில் செய்வதற்கான மாநிலமாக தமிழகம் இருப்பதாகவும் அவர்கள் கருதுகின்றனர் என்றும் அமைச்சர் தனது பேட்டியில் குறிப்பிட்டார்.

 
Published by:Murugesh M
First published:

Tags: Dubai, MK Stalin

அடுத்த செய்தி