• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • தீபாவளி முடிந்து, கட்சி நிர்வாகிகளுடன் டிடிவி தினகரன் ஆலோசனை... அடுத்த மூவ் என்ன?

தீபாவளி முடிந்து, கட்சி நிர்வாகிகளுடன் டிடிவி தினகரன் ஆலோசனை... அடுத்த மூவ் என்ன?

தீபாவளி முடிந்து, கட்சி நிர்வாகிகளுடன் டிடிவி தினகரன் ஆலோசனை... அடுத்த மூவ் என்ன?

தீபாவளி முடிந்து, கட்சி நிர்வாகிகளுடன் டிடிவி தினகரன் ஆலோசனை... அடுத்த மூவ் என்ன?

அமமுக தலைமைக் கழக நிர்வாகிகள் - மாவட்ட கழக செயலாளர்கள் ஆலோசனைக்கூட்டம் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தலைமையில் நவ.6 முதல் மூன்று நாட்கள் சென்னையில் நடைபெற உள்ளதாக அக்கட்சியின் தலைமை அறிவித்துள்ளது.

  • Share this:
    தீவிர அரசியலில் ஈடுபட உள்ளதாக அறிவித்த சசிகலா முதற்கட்ட பயணமாக தஞ்சை, மதுரை, ராமநாதபுரம் மாவட்டங்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். சிறையிலிருந்து திரும்பிய உடனே, அதிரடி அரசியலில் களமிறங்குவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், சசிகலா அரசியலில் இருந்து ஒதுங்கினார். பின்னர் சட்டமன்ற தேர்தலுக்கு பின்னர் மீண்டும் தனது அரசியலை சசிகலா தொடங்கினார்.

    இதையடுத்து, அக.16ம் தேதி ஜெயலலிதாவின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய அவர், தீவிர அரசியலில் ஈடுபட தொடங்கினார். இதனிடையே, சசிகலாவை மீண்டும் கட்சியில் இணைப்பது குறித்து தலைமை நிர்வாக க்குழுவில் பேசி முடிவெடுக்கப்படும் என்று ஓ.பன்னீர்செல்வம் கூறி பரபரப்பை ஏற்படுத்தினார்.

    இந்நிலையில், மீண்டும் அதிமுகவை கைப்பற்றும் முனைப்பில் அமமுக தீவிரமாக ஈடுபட்டு வருவதாக தெரிகிறது. அந்தவகையில்,
    தீபாவளி முடிந்து, கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை கூட்டம் நடைபெறும் என டிடிவி தினகரன் அறிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக அமமுக தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ஒவ்வொரு கணமும் நம்மை இயக்கிக் கொண்டிருக்கும் இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் மக்கள் நலக்கொள்கைகளை வாழவைத்திடவும், தமிழ்நாட்டின் உரிமைகளைக் காத்திடவும் லட்சியப் பயணம் மேற்கொண்டிருக்கும் அமமுகவின் தலைமைக் கழக நிர்வாகிகள், மாவட்டக் கழக செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெறவிருக்கிறது.

    சென்னை ராயப்பேட்டையில் உள்ள தலைமைக் கழக அலுவலகத்தில் கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தலைமையில் வருகிற 6.11.21 முதல் மூன்று நாட்களுக்கு நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் அந்தந்த மாவட்டங்களுக்கு உட்பட்ட தலைமைக்கழக நிர்வாகிகள், அமைப்புச் செயலாளர்கள், மாவட்டக் கழக செயலாளர்கள், மாநில சார்பு அணிகளின் நிர்வாகிகள் அனைவரும் தவறாது கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Esakki Raja
    First published: