ஊடகங்களிடம் அதிமுகவினர் கருத்துகூறத் தடை: தலைமை எச்சரிக்கை!

தனிநபர்களை அழைத்து அதிமுகவின் பிரதிநிதி போல் சித்தரிப்பதை ஊடகங்கள் அனுமதிக்க வேண்டாம் எனவும், இதனால் மக்களிடையே தவறான செய்திகள் கொண்டு சேர்க்கப்படும் எனவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

news18
Updated: June 12, 2019, 5:27 PM IST
ஊடகங்களிடம் அதிமுகவினர் கருத்துகூறத் தடை: தலைமை எச்சரிக்கை!
அ.தி.மு.க தலைமைக் கழகம்
news18
Updated: June 12, 2019, 5:27 PM IST
அதிமுக ஒற்றைத் தலைமை சர்ச்சை பரபரப்பை ஏற்படுத்தியதை அடுத்து, கட்சி விவகாரங்கள் குறித்து ஊடகங்களிடம் பேச வேண்டாம் என அதிமுக நிர்வாகிகளுக்கு அக்கட்சித் தலைமை உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி கூட்டாக விடுத்துள்ள அறிக்கையில், அதிமுகவின் செய்தித் தொடர்பாளராக உள்ளவர்கள், எந்தவொரு கருத்தையும் கட்சி நிர்வாகிகளின் ஒப்புதலை பெற்ற பின்பே தெரிவிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது

மேலும் மறுஅறிவிப்பு வரும்வரை, கட்சி விவகாரங்கள் குறித்து, செய்தித் தொடர்பாளர்கள் யாரும் எந்த ஒரு ஊடகத்திலும் பேச வேண்டாம் எனவும் அதிமுக அறிவுறுத்தியுள்ளது.

அதேபோல் மற்ற நிர்வாகிகள், தங்கள் கருத்துகளை அதிமுக கருத்தாக எந்த ஊடகத்திலும் தெரிவிக்ககூடாது எனவும், மீறினால் அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை பாயும் எனவும் அதிமுக எச்சரித்துள்ளது.

தனிநபர்களை அழைத்து அதிமுகவின் பிரதிநிதி போல் சித்தரிப்பதை ஊடகங்கள் அனுமதிக்க வேண்டாம் எனவும், இதனால் மக்களிடையே தவறான செய்திகள் கொண்டு சேர்க்கப்படும் எனவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Also see...

First published: June 12, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...