சிகிச்சை முடிந்து அமெரிக்காவிலிருந்து சென்னை திரும்புகிறார் விஜயகாந்த்!

அமெரிக்காவில் இருந்து விஜயகாந்த சென்னை வந்த பிறகு, நாடாளுமன்றத் தேர்தலுக்கான தேமுதிக-வின் கூட்டணிப் பேச்சுவார்த்தை தீவிரமடையும் என்று கூறப்படுகிறது.

news18
Updated: February 14, 2019, 10:39 AM IST
சிகிச்சை முடிந்து அமெரிக்காவிலிருந்து சென்னை திரும்புகிறார் விஜயகாந்த்!
தேமுதிக தலைவர் விஜயகாந்த்
news18
Updated: February 14, 2019, 10:39 AM IST
அமெரிக்காவில் மருத்துவ சிகிச்சையை முடித்துக் கொண்டு, தே.மு.தி.க பொதுச் செயலாளர் விஜயகாந்த், நாளை மறுதினம் தமிழகம் திரும்புகிறார். 

குரல் பிரச்சினை மற்றும் உடல்நலப் பாதிப்புகளுக்காக அமெரிக்காவில் உள்ள மருத்துவமனையில் தே.மு.தி.க பொதுச் செயலாளர் விஜயகாந்த் இரண்டாவது கட்ட சிகிச்சை பெற்று வருகிறார்.

கடந்த டிசம்பர் மாதம் 16-ம் தேதி சென்ற அவர், இரண்டு மாதங்களாக மேற்கொண்ட சிகிச்சை மூலம், உடல்நலம் தேறியுள்ளார்.

இதனைத் தொடர்ந்து, விஜயகாந்த் நாளை மறுதினம் காலை 8-30 மணிக்கு சென்னைக்கு திரும்ப உள்ளதாக தே.மு.தி.க தலைமை அறிவித்துள்ளது.

சென்னையில் விஜயகாந்துக்கு உற்சாக வரவேற்பு அளிப்பதற்கான ஏற்பாடுகளை கட்சி நிர்வாகிகள் செய்து வருகின்றனர். நாடாளுமன்றத் தேர்தலையொட்டி, பல்வேறு கட்சிகளுடன் தே.மு.தி.க பேச்சுவார்த்தை நடத்திவருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில், விஜயகாந்த் சென்னைக்கு திரும்பிய பிறகு, கூட்டணிப் பேச்சுவார்த்தை தீவிரமடையும் என்றும், எந்தெந்த கட்சிகளுடன் தே.மு.தி.க கூட்டணி அமைக்கும் என்பது இந்த மாத இறுதிக்குள் முடிவாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Also see...

First published: February 14, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...