• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்ட பின், காற்றில் மாசு அளவு குறைந்துள்ளது: தமிழக அரசு

ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்ட பின், காற்றில் மாசு அளவு குறைந்துள்ளது: தமிழக அரசு

ஸ்டெர்லைட் ஆலை

ஸ்டெர்லைட் ஆலை

ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்ட பின்னர், காற்றின் மாசு அளவு கடந்த ஆண்டை விட குறைந்துள்ளதாக அறிக்கையில் தகவல்

  • News18
  • Last Updated :
  • Share this:
ஸ்டெர்லைட் ஆலை மூடிய பின்னர், காற்றில் மாசு அளவு, குறைந்துள்ளதாக தமிழக அரசு ஆதாரங்களுடன் அறிக்கை அளித்துள்ளது.

ஸ்டெர்லைட் ஆலை குறித்து விசாரணை நடத்துவதற்கு, பசுமை தீர்ப்பாயத்தில் நியமிக்கப்பட்ட மூவர் குழுவிடம், தமிழக அரசின் மூத்த வழக்கறிஞர் சி.எஸ்.வைத்தியநாதன் அறிக்கை சமர்ப்பித்தார்.

மேகாலயா உயர்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி தருண் அகர்வாலா, மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறையைச் சேர்ந்த சதீஷ் கர்கோட்டி, மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தைச் சேர்ந்த வரலட்சுமி ஆகியோரிடம் அறிக்கை சமர்ப்பித்த அவர், ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்ட பின்னர், காற்றின் மாசு அளவு கடந்த ஆண்டை விட குறைந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

2017-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் எடுக்கப்பட்ட காற்று மாசு பரிசோதனையில், நச்சுத்தன்மை கொண்ட சல்பர் டை ஆக்சைட் 20 மைக்ரோகிராம் அளவிலும், நைட்ரஜன் டை ஆக்சைட் 15 மைக்ரோகிராம் அளவிலும் இருந்ததாக குறிப்பிட்ட வைத்தியநாதன், ஆலை மூடிய பின்னர், இந்தாண்டு அக்டோபர் 12,13 தேதிகளில் எடுக்கப்பட்ட காற்று மாசு பரிசோதனையில், சல்பர் டை ஆக்சைட் ஐந்து மைக்ரோகிராம் அளவிற்கும், நைட்ரஜன் டை ஆக்சைட் 7 மைக்ரோகிராம் அளவிற்கும் குறைந்திருப்பதாக ஆதாரப்பூர்வமாக தெரிவித்தார்

இதன்மூலம் ஸ்டெர்லைட் ஆலையால் காற்று மாசுபாடு ஏற்பட்டது உறுதிசெய்யப்படுகிறது என அவர் கூறினார். இந்த வழக்கு விசாரணையில் கலந்து கொண்ட மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, நிலங்களின் பரப்பளவை தவறாக காண்பித்து, வேதாந்தா நிறுவனம் சுற்றுச்சூழல் அனுமதி வாங்கியதை, தமிழக அரசு சுட்டிகாட்டியது என செய்தியாளர்களிடம் குறிப்பிட்டார்

ஸ்டெர்லைட் ஆலையால் காற்று மாசுபாடு ஏற்படுவதாக தமிழக அரசு அளித்துள்ள அறிக்கையால், இந்த வழக்கு விசாரணை முக்கிய கட்டத்தை எட்டியுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vinothini Aandisamy
First published: