சென்னை எழும்பூரில் அமைக்கப்பட்டுள்ள இயக்குநர் பா.ரஞ்சித்தின் நீலம் பதிப்பக புத்தக நிலையம் திறப்பு விழா இன்று நடைபெற்றது. நடிகரும் மக்கள் நீதி மய்யம் தலைவருமான கமல்ஹாசன் அதனை திறந்து வைத்தார்.
பின்னர் நிகழ்ச்சியில் பேசிய அவர், அரசியலையும் கலாச்சாரத்தையும் தனித்தனியே வைக்க வேண்டிய அவசியத்தில் இருக்கிறோம். ஆனால் அப்படி இருக்க வேண்டிய அவசியம் இல்லை. நாம் பேசுவது தான் அரசியல் என்றார். தனது முதல் அரசியல் எதிரி சாதி என்று குறிப்பிட்ட அவர், இதை தான் 21 வயதிலேயே சொல்லிவிட்டதாகவும், அரசியலில் இருந்து சாதியை ஒழிக்கும் போராட்டம் இன்றும் நடைபெற்றுக் கொண்டிருப்பதாகவும், நீலமும் மய்யமும் ஒன்றுதான் என்று குறிப்பிட்டார்.
மேலும், அரசியல்வாதியாகிய பிறகு சில சமரசங்கள் செய்து கொள்ள வேண்டியிருக்கிறது என்று கூறிய அவர், “ரஞ்சித்திற்கும் அவர் நண்பர்களுக்கும் என் வாழ்த்துக்கள். தடங்கல்கள் நிறைய வரும். ஆனால் அவற்றை மீறி பயணிக்க வேண்டும்” என்று அறிவுறுத்தினார்.
நிகழ்ச்சியில் பேசிய இயக்குநர் பா.ரஞ்சித், அரசியல் அடிப்படையிலான புத்தகங்களை மட்டுமே விற்பனைக்கு வைத்திருப்பதாக கூறினார். அடிமை சிந்தனையை மாற்றவும், அரசியல் விழிப்புணர்வோடு இருக்கவும் நீலம் பதிப்பக புத்தகங்கள் உதவும் என்றும் பா.ரஞ்சித் கூறினார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Kamalhaasan, Makkal Needhi Maiam