ஆவின் பால் விலை லிட்டருக்கு ரூ.3 குறைப்பு எதிரொலி: 1.68 லட்சம் லிட்டர் விற்பனை அதிகரிப்பு!

ஆவின் பால் விலை குறைப்பு

ஆவின் பால் விலை லிட்டருக்கு 3 ரூபாய் குறைக்கபட்டதன் எதிரொலியாக, இரண்டு மாதங்களில் 1.68 லட்சம் லிட்டர் விற்பனை அதிகரித்துள்ளது.

  • Share this:
திமுகவின் தேர்தல் அறிக்கையில் அறிவித்தபடி, தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் பதவியேற்றதும் ஆவின் பாலின் விலை லிட்டருக்கு ரூ.3 குறைக்கப்படும் என்ற ஆணையில் கையெழுத்திட்டார். அதன்படி லிட்டருக்கு மூன்று ரூபாய் விலை குறைப்பு மே 16ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வந்தது.

Also read: அண்டை மாநிலங்களில் அதிகரிக்கும் கொரோனா... தமிழகத்தில் தீவிர கண்காணிப்பு

ஆவின்பால் விலைபட்டியல் பால் அட்டைதாரர்களுக்கு சமன்படுத்தப்பட்ட பால் ஒரு லிட்டரின் விலை ரூ.40லிருந்து ரூ.37ஆக குறைக்கப்பட்டது. நிலைப்படுத்தப்பட்ட பால் அரை லிட்டர் ரூ.22.50ல் இருந்து 21 ஆக குறைக்கப்பட்டது.

சில்லரை விற்பனையில் சமன்படுத்தப்பட்ட பால் ஒரு லிட்டரின் விலை ரூ. 43லிருந்து ரூ. 40ஆக குறைக்கப்பட்டது. நிலைப்படுத்தப்பட்ட பால் அரை லிட்டர் ரூ.23.50ல் இருந்து 22 ஆக குறைக்கப்பட்டது.

இந்த விலைகுறைப்பை தொடர்ந்து, ஆவின் பால் விற்பனை அடுத்தடுத்து உயர்ந்தது. குறிப்பாக விலை குறைப்புக்கு முன் மே மாதத்தில் 24.69 லட்சம் லிட்டர் விற்பனை என இருந்த சூழலில், ஜூன் மாதத்தில் 26.27 லட்சம் லிட்டர் ஆக விற்பனை உயர்ந்தது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

தற்போது, ஜூலை மாதத்தில்  26.37 லட்சம் லிட்டர் என விற்பனை மேலும் அதிகரித்துளளது. குறிப்பாக இரண்டு மாதத்தில் 1 லட்சத்து 68 ஆயிரம் லிட்டர் ஆவின் பால் விற்பனை உயர்ந்துள்ளது.
Published by:Esakki Raja
First published: