ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

55 ஆண்டுகளுக்கு பின் கடல் கடந்து தந்தையின் கல்லறைக்கு அஞ்சலி செலுத்திய மகன்: முதல்வர் மு.க.ஸ்டாலின் புகழாரம்

55 ஆண்டுகளுக்கு பின் கடல் கடந்து தந்தையின் கல்லறைக்கு அஞ்சலி செலுத்திய மகன்: முதல்வர் மு.க.ஸ்டாலின் புகழாரம்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டு

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டு

தந்தையின் கல்லறையை சுமார் 55 ஆண்டுகள் கழித்து கடல் கடந்து தேடி சென்று அஞ்சலி செலுத்திய மகனின் செயலுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் புகழாரம் சூட்டியுள்ளார்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  தென்காசி மாவட்டம் கடையம் அருகேயுள்ள வெங்கடாம்பட்டியை சேர்ந்தவர் சமூக ஆர்வலர் திருமாறன். இவரது தந்தை பூங்குன்றன் 1967 ஆம் ஆண்டு மலேசிய நாட்டில் ஆசிரியராக பணிபுரிந்து மறைந்தார். அவருக்கு மலேசியாவிலேயே கல்லறை எழுப்பி விட்டு இந்தியா திரும்பி இருக்கிறார் அவரது மனைவி ராதாபாய். இந்தியா திரும்பிய சில வருடங்களிலேயே ராதாபாயும் இறந்துள்ளார்.

  இதையும் படிங்க: செந்தில் பாலாஜி மீதான ஊழல் வழக்கை விரிவாக விசாரிக்க வேண்டும்- உச்ச நீதிமன்றம்

  இந்நிலையில், 55 ஆண்டுகள் கழித்து கடல் கடந்து மலேசியா சென்ற திருமாறன் கூகுள் மேப் மூலம் கர்லிங் பகுதியில் உள்ள மயானத்தில் தந்தையின் கல்லறையை தேடி பிடித்துள்ளார். தந்தையின் முகமறியாத மகன் திருமாறன், தமிழ்நாட்டில் இருந்து விமானத்தில் மலேசியாவுக்கு கொண்டு வந்திருந்த தாயார் ராதாபாய் கல்லறை மண்ணை தந்தை கல்லறையில் தூவி விளக்கேற்றி அஞ்சலி செலுத்தினார்.

  இதனையறிந்த முதலமைச்சர் ஸ்டாலின் சமூக வலைதள பக்கத்தில் திருமாறனுக்கு புகழாரம் சூட்டியுள்ளார். அதில், அன்பின் தேடலில் தான் வாழ்நாளெல்லாம் நம் வாழ்வின் பயணம் அமைவதாகக் கூறியுள்ளார்.

  Published by:Arunkumar A
  First published:

  Tags: CM MK Stalin, Tenkasi, Twitter