முகப்பு /செய்தி /தமிழ்நாடு / தமிழ்நாட்டில் 4 மாதங்களுக்கு பிறகு கொரோனாவுக்கு ஒருவர் உயிரிழப்பு

தமிழ்நாட்டில் 4 மாதங்களுக்கு பிறகு கொரோனாவுக்கு ஒருவர் உயிரிழப்பு

மாதிரி படம்

மாதிரி படம்

Tamilnadu Corona | தமிழ்நாட்டில் 4 மாதங்களுக்கு பிறகு முதன் முறையாக கொரோனா தொற்றுக்கு ஒருவர் உயிரிழந்துள்ளார்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

தமிழ்நாட்டில் கடந்த சில மாதங்களாக கொரோனா பாதிப்பு குறைந்திருந்தது. இந்த நிலையில் ஒமிக்ரைன் வகை தொற்று தற்போது அதிகளவில் பரவி வருவதாக சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்து இருந்தார். இந்த நிலையில் சனிக்கிழமை மட்டும் மொத்தம் 39 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருப்பதாக தமிழ்நாடு சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் 4 மாதங்களுக்கு பிறகு கொரோனாவுக்கு இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி சிந்தாமணி, பூசாரி தெருவை சேர்ந்த உதயகுமார், பெங்களூரில் பணிபுரிந்து வந்தார். சுற்றுலா செல்வதற்காக கோவா சென்று உள்ளார். பின்னர் திருச்சியில் உள்ள வீட்டிற்கு திருப்பிய அவருக்கு கடும் வயிற்றுப்போக்கு, காய்ச்சல் ஏற்பட்டு உள்ளது. இதன் காரணமாக திருச்சியிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த உதயகுமாருக்கு கொரோனா தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில், அவருக்கு தொற்று உறுதி பாதிப்பு உறுதி செய்வதற்கு முன்பே இன்று காலை உயிரிழந்துள்ளார். பின்னர் மதியத்திற்கு மேல் வந்த பரிசோதனை முடிவில் அவருக்கு கொரோனா இருப்பதை மருத்துவர்கள் உறுதி செய்தனர்.

பொதுச்செயலாளர் தேர்தல்.. தீவிர களப்பணிக்கான திட்டம்- அதிமுக மாவட்டச் செயலாளர் கூட்டத்தில் என்ன நடந்தது?

இது குறித்து பேசிய திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார், ’கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்த உதயகுமாருடன் சுற்றுலா சென்ற குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் தனிமைப்படுத்தப்பட்டு அவர்களுக்கு ஒருநாள் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அவர்களுக்கு எந்தவித கொரோனா அறிகுறியும் இல்லை என்றும் அவர்கள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகின்றனர் என தெரிவித்துள்ளார்.

First published:

Tags: Corona death, CoronaVirus, Trichy