வழக்கறிஞர்கள் செய்யும் காரியமா இது? கஞ்சா விற்பனை செய்து போலீசாரிடம் வசமாக சிக்கினர்!

வழக்கறிஞர்கள்

வழக்கறிஞர்களே கஞ்சா விற்று போலீசாரிடம் சிக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 • Share this:
  போலீசாரிடம் சிக்காமல் மூன்று வருடங்களாக கஞ்சா விற்பனை செய்து வந்த வழக்கறிஞர் இருவர் கைது செய்யப்பட்டிருப்பது அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

  சென்னை பல்லாவரம் அடுத்த பம்மல் பகுதியில் கஞ்சா விற்பனை நடப்பதாக சங்கர் நகர் சட்டம் ஒழுங்கு ஆய்வாளர் மகுடீஸ்வரிக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில் ஆய்வாளர் தலைமையிலான ஐந்து பேர் கொண்ட தனிப்படை அமைத்து பம்மல் பகுதி முழுவதும் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

  அப்போது மூங்கில் ஏரி பகுதியில் ஒரு நபர் கஞ்சா புகைத்து கொண்டிருப்பதைப் பார்த்ததும் அவரை பிடித்த போலீசார் அவர்கள் பாணியில் கஞ்சா யார் விற்கின்றார்கள் எங்கு விற்பனை ஆகின்றது என்று விசாரணை நடத்தினர். விசாரணையில் பம்மல் மூங்கில் ஏரி, கென்னடி தெருவைச் சேர்ந்த சதீஷ் (வயது-30) மற்றும் பொழிச்சலூர் தேவதாஸ் நகரைச் சேர்ந்த ரெஜிவின்ஸ்(வயது-27) என தெரிந்தது.

  அதன் பின்னர் போலீசார் இருவரையும் கைது செய்தனர் அவர்களிடம் விசாரணை நடத்தியபோது திடுக்கிடும் தகவல்கள் வெளியானது இவர்கள் இருவருமே வழக்கறிஞர்கள் எனவும் சதீஷ் ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்திலும், ரெஜிவின்ஸ் கடப்பாவிலும் சட்டக் கல்வி முடித்து தாம்பரம் நீதிமன்றத்தில் பயிற்சி வழக்கறிஞர்களாக பணிபுரிந்து வருவதாக போலீசார் விசாரணையில் தெரியவந்தது.

  இருவரையும் கைது செய்து அவர்களிடமிருந்து 250 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர். இருவரையும் சங்கர் நகர் காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டதில் தற்போது 50 கிராம் கஞ்சாவை 250 ரூபாய்க்கு விற்பனை செய்து வருவதாகவும் ஊரடங்கு உள்ளபோது 50 கிராம் கஞ்சாவை 1,500 ரூபாய் வரை விற்பனை செய்ததாகவு ஒப்புக்கொண்டனர்.

  அதிக அளவில் கஞ்சா வாங்கி விற்பனை செய்தால் போலீசாரிடம் எளிதில் சிக்கி விடுவோம் என்பதற்காக 5,கிலோ அல்லது 10 கிலோ மட்டுமே கஞ்சாவை வாங்கி வந்து விற்பனை செய்ததாக போலீசாரிடம் ஒப்புக்கொண்டனர்.

  அதுமட்டுமின்றி சுமார் மூன்று வருடங்களாக பம்மல், பொழிச்சலூர், அனகாபுத்தூர், திருநீர்மலை மற்றும்  சுற்றுப்புற பகுதிகளில் கஞ்சா விற்பனை செய்ததாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
  வழக்கறிஞர்களே கஞ்சா விற்று போலீசாரிடம் சிக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

  செய்தியாளர் சுரேஷ், சென்னை
  Published by:Arun
  First published: