நீதிபதி தஹில் ரமாணி விவகாரம்! போராட்டத்தில் இறங்கிய உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள்

வழக்கறிஞர்கள் போராட்டம்

வழக்கறிஞர்கள் பணி புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளதால் தற்போது நீதிமன்ற பணிகள் முடங்கியுள்ளன.

 • News18
 • Last Updated :
 • Share this:
  சென்னை உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி தஹில் ரமாணிக்கு ஆதரவாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வழக்கறிஞர்கள் பணி புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர். 

  சென்னை உயர் நீதிமன்றத்தில் உள்ள சென்னை வழக்கறிஞர் சங்கம், பெண் வழக்கறிஞர் சங்கம்,  உள்ளிட்ட 4 சங்கங்களும் போராட்டத்தில் பங்கேற்றன. வழக்கறிஞர்கள் சாதாரண உடையணிந்து நீதிமன்றம் வந்ததுடன், அனைவரும் ஒன்றாக கூடி தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பினர்.

  வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பு காரணமாக நீதிமன்ற வளாகமே வெறிச்சோடி காணப்பட்டது. எப்போதும் போராட்டத்தில் பங்கேற்காத மூத்த வழக்கறிஞர்களைக் கொண்ட மெட்ராஸ் பார் அசோசியேனும் இன்றைய போராட்டத்தில் பங்கேற்றுள்ளது.

  மதுரையில் வழக்கறிஞர்கள் காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அரசியல் சாயம் இல்லாத போராட்டம் இதுவென்றும், அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து வியாழக்கிழமை பொதுக்குழுவை கூட்டி முடிவு செய்யப்படும் எனவும் அவர்கள் தெரிவித்தனர். வழக்கறிஞர்கள் யாரும் பணிக்கு வராததால் அவர்களது வழக்குகள் ஒத்திவைக்கப்பட்டன.

  Also see...

  Published by:Vinothini Aandisamy
  First published: