பாலியல் வழக்கை விசாரிக்க பெண் டிஐஜி தலைமையில் விசாரனைக் குழு அமைக்கக் கோரி மனு!
பாலியல் வழக்கை விசாரிக்க பெண் டிஐஜி தலைமையில் விசாரனைக் குழு அமைக்கக் கோரி மனு!
சென்னை உயர்நீதிமன்றம்.
பாலியல் வன்கொடுமை சம்பவம் தொடர்பான வழக்கில் சஸ்பெண்ட் செய்யப்பட்ட எஸ்பி பாண்டியராஜன், எஸ்.ஐ ராஜேந்திர பிரசாத் மீது வழக்குப்பதிவு செய்யவும் அந்த மனுவில் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவம் தொடர்பான வழக்கை விசாரிக்க டிஐஜி அந்தஸ்துக்கு குறையாத பெண் அதிகாரி தலைமையில் சிறப்பு புலனாய்வுக் குழு அமைக்க கோரி 10 பெண் வழக்கறிஞர்கள் வழக்கு தொடர்ந்துள்ளனர்.
இது தொடர்பாக பெண் வழக்கறிஞர்கள் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது, பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் நடந்த உண்மையை கண்டறிய உண்மை கண்டறியும் குழுவை அமைக்க வேண்டும்.
பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு உளவியல் ஆலோசனை உள்ளிட்ட உதவிகள் வழங்க அனைத்து மாவட்டங்களிலும் ஓய்வு பெற்ற மாவட்ட நீதிபதி தலைமையில் புகார் குழு அமைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.
பாலியல் வன்கொடுமை சம்பவம் தொடர்பான வழக்கில் சஸ்பெண்ட் செய்யப்பட்ட எஸ்பி பாண்டியராஜன், எஸ்.ஐ ராஜேந்திர பிரசாத் மீது வழக்குப்பதிவு செய்யவும் அந்த மனுவில் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்த மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி தஹிலரமானி தலைமையிலான அமர்வு இந்த வழக்கு குறித்து தமிழக அரசும், டிஜிபியும் ஜூன் 7க்குள் பதிலளிக்க உத்தரவிட்டனர்.
Also see...
Published by:Vinothini Aandisamy
First published:
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.