ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

உதகை ஹோம்மேட் சாக்லெட்டில் கலப்படமா?

உதகை ஹோம்மேட் சாக்லெட்டில் கலப்படமா?

மாதிரிப்படம்.

மாதிரிப்படம்.

  • News18
  • 1 minute read
  • Last Updated :

உதகையில் தயாரிக்கப்படும் ஹோம்மேட் சாக்லெட்டில் கலப்படம் அதிகரித்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. கலப்படத்தை கட்டுப்படுத்தாவிட்டால், ஹோம்மேட் சாக்லேட் தொழில் அழியும் அபாயம் உள்ளதாக விற்பனையாளர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

ஹோம் மேட் சாக்லெட் என்றால் அனைவரின் நினைவிற்கும் முதலில் வருவது உதகை. இங்கு நிலவும் இதமான காலநிலை சாக்லெட் தயாரிக்க உகந்ததாக உள்ளது. தமிழகம் மற்றும் கேரளா மாநிலங்களில் சாகுபடி செய்யப்படும் கோகோ பழங்களில் இருந்து சேகரிக்கப்படும் கொட்டைகளை அரைத்து அவற்றுடன் கோகோ பவுடர், சர்க்கரை சேர்த்து டார்க், மில்க், ஒய்ட் என 3 ரகங்களில் ஹோம் மேட் சாக்லெட் தயாரிக்கப்படுகிறது.

ஹோம்மேட் சாக்லெட்டுகள் குன்னூர் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் தற்போது குடிசை தொழிலாக வளர்ந்து வருகிறது. மிக குறைந்த விலையில் கலப்படம் நிறைந்த ஹோம் மேட் சாக்லெட்கள் விற்கப்படுவதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தாவர எண்ணெய்யும், தரம் குறைந்த சாக்லெட் பவுடரும் கலப்பதாக விற்பனையாளர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

முந்திரி பருப்பு, உலர்ந்த திராட்சை, பாதாம், பிஸ்தா ஆகியவற்றை கொண்டு ஹோம்மேட் சாக்லெட்டுகள் தயாரிக்கப்படுகின்றன. தரமான ஹோம்மேட் சாக்லெட்டுகள் கிலோ 200 முதல் 700 ரூபாய் வரை விற்கப்படுகிறது. அதிகரித்து வரும் கலப்பட சாக்லெட்டுகளை கட்டுபடுத்தாவிட்டால், தொழிலே பாதிக்கும் அபாயம் உள்ளதாக விற்பனையாளர்கள், தயாரிப்பாளர்களும் வருத்தம் தெரிவிக்கின்றனர்.

ஹோம் மேட் சாக்லெட் வாங்கும் போது விலையை மட்டும் பார்க்காமல் அதனை சுவைத்தும் , வாசனையை நுகர்ந்தும் வாங்கினாலே கலப்படத்தை எளிதில் கண்டுபிடித்து விடலாம் என அறிவுறுத்துகின்றனர் விற்பனையாளர்கள்.

First published:

Tags: Adulteration on homemade chocolates, Homemade chocolates, Ooty