Home /News /tamil-nadu /

நாங்குநேரி & விக்கிரவாண்டி இடைத்தேர்தல்... அதிமுக வெற்றி

நாங்குநேரி & விக்கிரவாண்டி இடைத்தேர்தல்... அதிமுக வெற்றி

திமுக- அதிமுக

திமுக- அதிமுக

  • News18
  • Last Updated :
    நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி ஆகிய இரண்டு சட்டமன்ற தொகுதிகளில் நடைபெற்ற இடைத்தேர்தலில் அதிமுக வெற்றி பெற்றது.

    நாங்குநேரியில் எம்.எல்.ஏவாக இருந்து வந்த எச். வசந்தகுமார், நாடாளுமன்ற தேர்தலில் கன்னியாகுமரியில் போட்டியிட்டு முன்னாள் மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணனை தோற்கடித்து மக்களவை உறுப்பினராக பொறுப்பேற்றார். அதனைத் தொடர்ந்து நாங்குநேரி தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது.

    மேலும், விக்கிரவாண்டி தொகுதியில் எம்.எல்.ஏவாக செயல்பட்டு வந்த ராதாமணி உடல் நலக்குறைவால் உயிரிழந்தார். அதனைத் தொடர்ந்து அந்த தொகுதி காலியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டது.

    இந்த இரண்டு தொகுதிகளுக்கும் கடந்த அக்டோபர் மாதம் 21-ம் தேதி தேர்தல் நடைபெற்றது. இந்த இரண்டு தொகுதிகளின் தேர்தல் முடிவுகள் அக்டோபர் 24-ம் தேதியன்று வெளியிடப்பட்டது.

    அப்போது திமுக கூட்டணியின் வசம் இருந்த நாங்குநேரியுடன், விக்கிரவாண்டி தொகுதியிலும் அதிமுக அமோக வெற்றியடைந்தது.
    Published by:Vinothini Aandisamy
    First published:

    Tags: YearEnder 2019

    அடுத்த செய்தி