தமிழகம் முழுவதும் அமோக வெற்றி... ஆனால் திமுகவை 2 மாவட்டங்களில் வாஷ் அவுட் செய்த அதிமுக

தமிழகம் முழுவதும் அமோக வெற்றி... ஆனால் திமுகவை 2 மாவட்டங்களில் வாஷ் அவுட் செய்த அதிமுக

எடப்பாடி பழனிசாமி, மு.க.ஸ்டாலின்

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் தொகுதி முடிவுகள் (Tamil Nadu Assembly Election Constituency):தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் தொகுதி முடிவுகள், தேர்தல் முடிவுகள், தேர்தல் செய்திகள்

  • Share this:
கொங்கு மண்டலம் எப்போதும் அதிமுகவின் கோட்டை என்று அழைக்கப்படுவது வழக்கம். கொங்கு மண்டலத்தின் முக்கிய  மாவட்டமான கோவை மாவட்டத்தில் உள்ள  10 சட்டமன்ற தொகுதிகளும் தற்போது அதிமுக வசம் வந்திருக்கின்றது. கோவை மாவட்டத்தில் 9 சட்டமன்றத் தொகுதிகளில் அதிமுக வும் , ஒரு சட்டமன்றத் தொகுதியில் கூட்டணி கட்சியான பாஜகவும்  போட்டியிட்டது. போட்டியிட்ட 10 தொகுதிகளிலும் அதிமுக கூட்டணி வெற்றி பெற்றுள்ளது.

கோவை தெற்கு தொகுதியில் வாக்கு எண்ணிக்கையானது காலை முதலே பரபரப்பாக இருந்தது. காங்கிரஸ் வேட்பாளர் மயூரா ஜெயக்குமார், பா.ஜ.க வேட்பாளர் வானதிசீனிவாசன்,ம.நீ.ம வேட்பாளர் கமலஹாசன் என முக்கிய வேட்பாளர்கள் மாறி மாறி முன்னிலையில் வந்தனர்.

இந்நிலையில் இறுதியாக 25, 26 வது சுற்று வாக்கு எண்ணிக்கையின் போது வானதிசீனிவாசனும், கமலஹாசனும் வாக்கு எண்ணிக்கை மையத்தில் அருகருகே அமர்ந்து வாக்கு எண்ணிக்கையை கவனித்தனர். இறுதியாக  பா.ஜ.க வேட்பாளர் வானதி சீனிவாசன் 1728 வாக்குகள் வித்தியாசத்தில் கமலஹாசனை  வெற்றி பெற்றார்.

Also Read : அதிமுகவை 6 மாவட்டங்களில் வாஷ் அவுட் செய்த திமுக -

இதே போன்று தொண்டாமுத்தூர் தொகுதியில் திமுக கார்த்திகேய சிவசேனாபதி 81829 வாக்குகளும்,அதிமுக வேட்பாளர் எஸ்.பி. வேலுமணி 123538 வாக்குகளும் பெற்றனர். திமுக வேட்பாளரை விட  41704 வாக்கு வித்தியாசத்தில் அதிமுக வேட்பாளர் எஸ்.பி.வேலுமணி வெற்றி பெற்றார்.

இதே போல கோவை வடக்கு, வால்பாறை, பொள்ளாச்சி  சிங்காநல்லூர் கிணத்துகடவு. உள்ளிட்ட கோவையின் 10 தொகுதிகளிலும் அதிமுக வெற்றி பெற்றது. இதன்மூலம் கோவை மாவட்டம் அதிமுகவின் கோட்டை என்பது மீண்டும் நிரூபணமாகியுள்ளது.

Also Read : அதிமுக-வின் 11 அமைச்சர்கள் தோல்வி... 16 அமைச்சர்கள் வெற்றி - முழு விவரம்
அதேபோல, தருமபுரி மாவட்டத்திற்கு உட்பட்ட 5  தொகுதிகளையும் அதிமுக கூட்டணிக் கட்சி வேட்பாளர்கள் கணிசமான வாக்குகளைப் பெற்று கைப்பற்றியுள்ளனர். தமிழகத்தில் பல மாவட்டங்களில் திமுக அமோக வெற்றி பெற்றாலும் கோவை மற்றும் தருமபுரியை முழுவதுமாக இழந்துள்ளது.

Published by:Vijay R
First published: