வேலூர் மக்களவை தேர்தலில் மானத்தை காப்பாற்றுங்கள் - தொண்டர்களுக்கு அதிமுக கோரிக்கை

வைத்திலிங்கம்

  • News18
  • Last Updated :
  • Share this:
வேலூர் மக்களவை தொகுதி தேர்தலில், அதிமுகவின் மானத்தை காப்பாற்ற தொண்டர்கள் அயராது உழைக்க வேண்டும் என்று அக்கட்சியின், துணை ஒருங்கிணைப்பாளர் வைத்தியலிங்கம் கேட்டுக் கொண்டுள்ளார்.

வேலூர் மக்களவை தொகுதியின் அதிமுக தேர்தல் பணிக் குழுவின் ஆலோசனை கூட்டம் அவைத்தலைவர் மதுசூதனன் தலைமையில் நடைபெற்றது.

கூட்டத்தில் துணை ஒருங்கிணைப்பாளர்கள் கே.பி.முனுசாமி, வைத்தியலிங்கம், அதிமுக கூட்டணி வேட்பாளர் ஏ.சி.சண்முகம், அமைச்சர்கள் செங்கோட்டையன், ஜெயக்குமார், சி.வி.சண்முகம், கே.பி.அன்பழகன், ஆர்.பி.உதயகுமார் உள்ளிட்டோரும் கலந்துக் கொண்டனர்.

கூட்டத்தில் பேசிய வைத்தியலிங்கம், ஆட்சி என்பது துண்டு போன்றும், கட்சி என்பது வேட்டி போன்றும் குறிப்பிட்டார். ஆட்சி போனால் மீண்டும் பெற்றுவிடலாம் எனக்கூறிய அவர், கட்சி என்ற வேட்டியை காப்பாற்ற வேண்டுமென்றால் தேர்தலில் வெற்றிபெற வேண்டும் என கூறினார்.
Published by:Vijay R
First published: