Home /News /tamil-nadu /

இடைத்தேர்தல் போல் சட்டமன்ற தேர்தலிலும் வெற்றிபெற பணியாற்றுங்கள் - முதல்வர் பழனிசாமி

இடைத்தேர்தல் போல் சட்டமன்ற தேர்தலிலும் வெற்றிபெற பணியாற்றுங்கள் - முதல்வர் பழனிசாமி

முதலமைச்சர் பழனிசாமி

முதலமைச்சர் பழனிசாமி

கூட்டத்தில் பேசிய முதலமைச்சர் பழனிசாமி, அதிமுக அரசு கடந்த 4 ஆண்டுகளில் செய்த சாதனைகளை மக்களிடம் கொண்டு சேர்த்தால் நிச்சயம் வெற்றி உறுதி என கூறினார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
    நாடாளுமன்ற தேர்தல் தோல்வியை கண்டு துவண்டுவிடாமல் பணியாற்றினால் தொடர்ந்து மூன்றாவது முறையாக அதிமுக ஆட்சியை பிடிக்கும் என முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

    அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்லம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ராயப்பேட்டையில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில், அமைச்சர்கள், மாவட்ட செயலாளர்கள், மண்டலப் பொறுப்பாளர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    கூட்டத்தில் பேசிய முதலமைச்சர் பழனிசாமி, அதிமுக அரசு கடந்த 4 ஆண்டுகளில் செய்த சாதனைகளை மக்களிடம் கொண்டு சேர்த்தால் நிச்சயம் வெற்றி உறுதி என கூறினார். குறிப்பாக மருத்துவ சேர்க்கையில் 7 புள்ளி 5 விழுக்காடு முன்னுரிமை ஒதுக்கீடு சாதனையை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் என்றும், கடினமாக உழைத்தால் விக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத்தேர்தலை போல் அதிமுக பெரும் வெற்றி பெறும் என நம்பிக்கை தெரிவித்தார்.

    இந்த ஆலோசனை கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செல்லூர் ராஜூ, வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதை அதிமுக நிர்வாகிகள் உறுதிப்படுத்த வேண்டும் என வலியுறுத்தினார்



    நாடு முழுவதும் பரவும் கொரோனா குறித்த தற்போதைய விரிவான தகவல்கள்
    Published by:Vijay R
    First published:

    Tags: Edappadi palanisamy

    அடுத்த செய்தி