கடந்த சட்டமன்ற பொதுத் தேர்தலில் ஈரோடு கிழக்கு தொகுதியில் அதிமுக கூட்டணி சார்பில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி போட்டியிட்ட நிலையில், தற்போது இடைத்தேர்தலில் யார் போட்டியிடுவது என்பது குறித்து, தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே. வாசனை அதிமுக மூத்த நிர்வாகிகள் சந்தித்து நேற்று ஆலோசனை நடத்தினர். அதனைத் தொடர்ந்து இந்த தேர்தலில் அதிமுக போட்டியிடும் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.
ஈரோடு கிழக்கு தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் திருமகன் ஈவெரா இறந்த நிலையில் அந்த பகுதிக்கு வரும் பிப்ரவரி 27 ஆம் நாள் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இத்தொகுதிக்கு ஜனவரி 31 ஆம் தேதியுடன் வேட்புமனு தாக்கல் செய்ய வேண்டும் என்ற நிலையில் தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே. வாசன், அதிமுக தற்போது அந்த தொகுதியில் போட்டியிடும் என்று அறிவித்துள்ளார்.
தமாகா தலைவர் ஜி.கே வாசன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், இடைத்தேர்தலில் அதிமுக போட்டியிட வேண்டும் என்று அதிமுக நிர்வாகிகள் விருப்பம் தெரிவித்ததாகவும், தற்போதைய அரசியல் சூழல், எதிர்கால நாடாளுமன்ற, சட்டமன்றத் தேர்தல்கள் ஆகியவற்றை கருத்தில் கொண்டு, அதிமுக-வின் விருப்பத்தை தமிழ் மாநில காங்கிரஸ் ஏற்றுக் கொண்டதாகவும் தெரிவித்துள்ளார்.
Also read : தமிழ்நாடு முழுவதும் பால், தயிர் விலை உயர்வு.. இன்று முதல் அமல்!
தமிழ்நாடு மக்களின் நலன் மற்றும் கூட்டணிக் கட்சிகளின் நலன் ஆகியவற்றை மிக முக்கிய நோக்கமாகக் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் ஜி.கே.வாசன் கூறியுள்ளார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: ADMK, Erode, Erode Bypoll, G.K.Vasan