அதிமுக சார்பில் இஃப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி
சென்னையில் வரும் புதன் கிழமையன்று நடைபெறும் என அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர் செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர்
எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கூட்டாக அறிக்கை வெளியிட்டுள்ளனர்.
இதுதொடர்பாக இருவரும் வெளியிட்டுள்ள அறிக்கையில், ’அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் சார்பில் ஆண்டுதோறும் இஃப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
ஜெயலலிதாவின் வழியில் இவ்வாண்டும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கழக ஒருங்கிணைப்பாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவரும், தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சருமான ஓ. பன்னீர் செல்வம், கழக இணை ஒருங்கிணைப்பாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவரும் தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி ஆகியோர், வருகின்ற 27.04.2022 – புதன்கிழமை மாலை 5.30 மணியளவில் சென்னை, டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலையில் உள்ள நியூ உட்லண்ட்ஸ் ஓட்டலில் இஃப்தார் விருந்து வழங்க உள்ளார்கள்.
இதையும் படிங்க - நெட்டிசன்களை குழப்பமடைய வைக்கும் சென்னை கலைஞரின் ட்விட்.! வைரலாகும் போட்டோ
இந்நிகழ்ச்சியில் இஸ்லாமிய சமுதாய பெருமக்கள், தோழமைக் கட்சிகளின் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகள் தலைமைக் கழக நிர்வாகிகள், மாவட்டக் கழக செயலாளர்கள், கழக நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், முன்னாள் அமைச்சர்கள் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளனர் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்’ என்று குறிப்பிட்டுள்ளது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.