Home /News /tamil-nadu /

அ.தி.மு.க கூட்டணி கட்சிகளின் தொகுதி ஒதுக்கீடு நாளை அறிவிப்பு!

அ.தி.மு.க கூட்டணி கட்சிகளின் தொகுதி ஒதுக்கீடு நாளை அறிவிப்பு!

அ.தி.மு.க தலைமைக் கழகம்

அ.தி.மு.க தலைமைக் கழகம்

அதிமுக கூட்டணியில் பா.ம.கவுக்கு ஏழு தொகுதிகளும், பா.ஜ.கவுக்கு 5 தொகுதிகளும், தே.மு.தி.கவுக்கு 4 தொகுதிகளும் மற்ற கட்சிகளுக்கு தலா ஒரு தொகுதியும் ஒதுக்கப்பட்டுள்ளது.

  • News18
  • Last Updated :
அ.தி.மு.க கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சிகள் எந்தெந்த தொகுதிகளில் போட்டியிடும் என்பது நாளை அறிவிக்கப்படவுள்ளது.

அ.தி.மு.க கூட்டணியில் பா.ம.க, பா.ஜ.க, தே.மு.தி.க, புதிய தமிழகம், புதிய நீதிக் கட்சி, தமிழ் மாநில காங்கிரஸ், என்.ஆர்.காங்கிரஸ் ஆகிய கட்சிகள் இடம் பெற்றுள்ளன. அதில், பா.ம.கவுக்கு ஏழு தொகுதிகளும், பா.ஜ.கவுக்கு 5 தொகுதிகளும், தே.மு.தி.கவுக்கு 4 தொகுதிகளும் மற்ற கட்சிகளுக்கு தலா ஒரு தொகுதியும் ஒதுக்கப்பட்டுள்ளது. மொத்தமுள்ள 40 தொகுதிகளில் 20 தொகுதிகள் கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், 20 தொகுதிகளில் அ.தி.மு.க போட்டியிடுகிறது.

வாக்குப் பதிவுக்கு ஒரு மாத காலமே உள்ள நிலையில், அ.தி.மு.க கூட்டணி கட்சிகள் எந்தெந்த தொகுதிகளில் போட்டியிடவுள்ளன என்பது உறுதி செய்யப்படாமல் உள்ளது.  இந்தநிலையில், இன்று காலையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, தே.மு.தி.க பொதுச் செயலாளர் விஜயகாந்தை நேரில் சென்று சந்தித்தார். அவர்களுடைய சந்திப்பில், தொகுதி ஒதுக்கீடு குறித்து ஆலோசனை நடந்ததாக தெரிகிறது.

இந்தநிலையில், அ.தி.மு.க கூட்டணி கட்சித் தலைவர்கள் சென்னையிலுள்ள கிரவுன் பிளாசா ஹோட்டலில் நாளை (மார்ச் 17) காலை செய்தியாளர்களைச் சந்திக்கவுள்ளனர். அப்போது, கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ள தொகுதிகள் குறித்து அ.தி.மு.க தலைமை அறிவிக்கும்.

Also see:

Published by:Karthick S
First published:

Tags: AIADMK Alliance, Elections 2019, Lok Sabha Election 2019

அடுத்த செய்தி