• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • அரவக்குறிச்சியில் நிர்மலா பெரியசாமி போட்டி?

அரவக்குறிச்சியில் நிர்மலா பெரியசாமி போட்டி?

 நிர்மலா பெரியசாமி

நிர்மலா பெரியசாமி

சூலூரில் மறைந்த எம்.எல்.ஏ கனகராஜ் மனைவி ரத்தினம், முன்னாள் அமைச்சர் செ.ம.வேலுச்சாமிக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது.

  • News18
  • Last Updated :
  • Share this:
தமிழகத்தில் 4 தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்கள் இன்று அறிவிக்கப்பட உள்ளனர். 4 தொகுதிகளில் போட்டியிட 200-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்திருக்கும் நிலையில், யார் யாருக்கு இந்த தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைக்கும் என்ற உத்தேச பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம், சூலூர், ஓட்டப்பிடாரம் ஆகிய 4 தொகுதியில் போட்டியிட அதிமுகவினர் 200-க்கும் மேற்பட்டோர், விண்ணப்பித்துள்ளனர். திருப்பரங்குன்றம் வேட்பாளரை தேர்வு செய்வதில், மதுரை நிர்வாகிகளிடம் மீண்டும் மல்லுக்கட்டு துவங்கியுள்ளது.

திருப்பரங்குன்றம் தொகுதியில் போட்டியிட ஜெ பேரவை துணைச் செயலாளர் வெற்றிவேல், மாவட்ட இளைஞரணி செயலாளர் வழக்கறிஞர் ரமேஷ், முன்னாள் எம்எல்ஏ முத்துராமலிங்கம் ஆகியோரது பெயர்கள் பரிந்துரை செய்யப்பட்டுள்ளன.

மக்களவைத் தேர்தலில் ராஜன் செல்லப்பா-வின் கோரிக்கை ஏற்கப்பட்டதால், இம்முறை தனது கோரிக்கை ஏற்கப்பட வேண்டும் என அமைச்சர் உதயகுமார் போர்க்கொடி தூக்கியுள்ளார். அதே நேரத்தில் தனது சார்பில் சினிமா பைனான்சியர் அன்புச் செழியன் பெயரை செல்லூர் ராஜு பரிந்துரைத்துள்ளார்.

இந்தப் போட்டியில்" மறைந்த முன்னாள் எம்எல்ஏ ஏ.கே.போசின் மனைவி பெயரும் உள்ளது. எனவே, திருபரங்குன்றம் தொகுதியை பொறுத்தவரை, மறைந்த சட்டமன்ற உறுப்பினர் ஏ.கே.போஸின் மனைவி பாக்கியலட்சுமி அல்லது சினிமா பைனான்சியர் அன்புச்செழியனுக்கு சீட் வழங்கப்படக்கூடும் என்கிற கருத்து நிலவுகிறது.

சூலூர் தொகுதியில், மறைந்த எம்.எல்.ஏ கனகராஜ் மனைவி ரத்தினம் அல்லது முன்னாள் அமைச்சர் செ.ம.வேலுச்சாமிக்கு வாய்ப்பு வழங்கப்படலாம் என்கிற எதிர்பார்ப்பு உள்ளது. செ.ம வேலுச்சாமி, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அமைச்சர் செங்கோட்டையனுக்கு நெருக்கமானவர் என்பதால், அவருக்கு சீட் வழங்கப்படலாம் என்று கூறப்படுகிறது.

ஒட்டப்பிடாரத்தில், முன்னாள் எம்.எல்.ஏ மோகனுக்கு வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அமைச்சர் கடம்பூர் ராஜூவின் தீவிர ஆதரவாளரான, மோகனின் பொருளாதாரமும் பலமாக உள்ளதால்,அவருக்கு வாய்ப்பு பிரகாசமாக உள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.

அரவக்குறிச்சி தொகுதியை பொறுத்தவரை நிர்மலா பெரியசாமிக்கு வாய்ப்பு வழங்கப்படலாம் எனத் தெரிகிறது. கரூர், நிர்மலாவின் சொந்த மாவட்டம் என்பதாலும் சாதி ரீதியாக செந்தில் பாலாஜியை எதிர்கொள்ள சரியான போட்டியாக இருப்பார் என்றும் அதிமுக தலைமை கருதுகிறது.

மேலும் நிர்மலா பெரியசாமிக்கு மக்களிடையே உள்ள அறிமுகமும் சாதகமான அம்சமாக பார்க்கப்படுகிறது. இருப்பினும் அமைச்சர் எம்.ஆர் விஜயபாஸ்கர் ஒத்துக்கொண்டால் மட்டுமே நிர்மலா பெரிய சாமிக்கு சீட் உறுதியாகும். 4 தொகுதிகளில் போட்டியிட போட்டா போட்டி நிலவி வரும் நிலையில் இன்று மாலை அதிமுக தலைமை கழகத்தில் இருந்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாக உள்ளது.

Also see... பொன்பரப்பி கலவரத்துக்கு காரணம் என்ன? - திருமாவளவன்


Also see... இலங்கையில் தேவாலயங்கள் உட்பட 6 இடங்களில் குண்டு வெடிப்பு... என்ன நடக்கிறது?


Also see...




தேர்தல் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க. அரசியல் செய்திகள், தேர்தல் பிரசார வீடியோக்கள், சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.



Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vaijayanthi S
First published: