Home /News /tamil-nadu /

டிடிவி தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் மூவரை தகுதி நீக்கம் செய்ய அரசு கொறடா பரிந்துரை

டிடிவி தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் மூவரை தகுதி நீக்கம் செய்ய அரசு கொறடா பரிந்துரை

டிடிவி தினகரன்

டிடிவி தினகரன்

எடப்பாடி பழனிசாமி தலைமைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆளுநரிடம் புகார் கடிதம் அளித்த டிடிவி தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 18 பேர் தகுதி நீக்கம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

  • News18
  • 1 minute read
  • Last Updated :
    டிடிவி தினகரனுக்கு ஆதரவாக உள்ள 3 எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்ய வீடியோ ஆதாரங்களுடன் சபாநாயகர் தனபாலிடம் அரசு கொறடா ராஜேந்திரன் பரிந்துரை செய்துள்ளார்.

    அறந்தாங்கி ரத்தினசாபாபதி, கள்ளக்குறிச்சி பிரபு மற்றும் விருதாச்சலம் கலைச்செல்வன் ஆகிய 3 அதிமுக எம்.எல்.ஏ.க்கள் டிடிவி தினகரன் ஆதரவாளர்களாக உள்ளனர்.

    டிடிவி தினகரன் அமமுகவை தொடங்கியதற்கு முன்பிருந்தே மூவரும் அவரது ஆதரவாளராக இருந்தனர். எனினும், ஆட்சியை தக்கவைக்க பெரும்பான்மை தேவைப்பட்டதால் மூவர் மீதும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

    இந்நிலையில், கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதால், மூவரையும் தகுதி நீக்கம் செய்ய தமிழக அரசு கொறடா ராஜேந்திரன், சபாநாயகர் தனபாலிடம் வீடியோ ஆதாரங்களுடன் புகாரளித்து, பரிந்துரை செய்துள்ளார்.

    இதற்காக, அரசு கொறடா ராஜேந்திரன் மற்றும் சட்டத்துறை அமைச்சர் சி.வி சண்முகம் ஆகியோர் உடன் அவர் ஆலோசனை நடத்தினார்.

    முதலில் மூன்று பேருக்கும் நோட்டீஸ் அனுப்ப சபாநாயகர் முடிவு செய்துள்ளார். 3 பேர் அளிக்கும் விளக்கத்தை அடுத்து, அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்பட வாய்ப்பு இருக்கிறது.

    எடப்பாடி பழனிசாமி தலைமைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆளுநரிடம் புகார் கடிதம் அளித்த டிடிவி தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 18 பேர் தகுதி நீக்கம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    தமிழகத்தில் காலியாக இருந்த 23 சட்டமன்ற தொகுதிகளில் 19 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடந்துள்ளது. மீதமுள்ள 4 தொகுதிகளுக்கு மே 19-ம் தேதி தேர்தல் நடக்க உள்ளது.

    இதன் முடிவுகள் மே 23-ம் தேதி அறிவிக்கப்பட உள்ளன.

    Published by:Sankar
    First published:

    Tags: ADMK, TTV Dhinakaran

    அடுத்த செய்தி