உள்ளாட்சித் தேர்தல்: போலீஸ் மீது நம்பிக்கையில்லை, சி.ஆர்.பி.ஏஃப். வேண்டும்- தேர்தல் ஆணையத்தில் அதிமுக மனு

மாதிரிப் படம்

தேர்தல் பார்வையாளராக மத்திய அரசு அதிகாரியையோ வேறு மாநிலத்தைச் சேர்ந்த அதிகாரியையோ நியமிக்க வேண்டும் என்றும் அதிமுக சார்பில் கோரப்பட்டுள்ளது

  • Share this:
    ஊரக உள்ளாட்சித் தேர்தல் பாதுகாப்புப் பணியில் மாநில போலீசை ஈடுபடுத்தக் கூடாது என்றும் சி.ஆர்.பி.எஃப். வீரர்களை ஈடுபடுத்த வேண்டும் என்றும் அதிமுக சார்பில் மாநில தேர்தல் ஆணையத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது.

    தமிழகத்தின் சென்னை, செங்கல்பட்டு உட்பட 9 மாவட்டங்களுக்கு அடுத்த மாதம் 6ம் தேதி மற்றும் 9ம் தேதிகளில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடங்கியது. இந்நிலையில், உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையர் பழனிசாமிக்கு கடிதம் எழுதியுள்ளார்.

    அதில், “கொரோனா தொற்று  பரவல் அச்சம்  நிலவும் சூழலில் தேர்தலை நடத்துவது தொடர்பாக சில  கோரிக்கை உள்ளன. தேர்தலில் வெற்று பெறுவதற்காக ஆளுங்கட்சி முறைகேட்டில் ஈடுபடலாம் என்பதால் அதனை தடுத்து  தேர்தலை நியாயமாக நடத்த வேண்டிய கடமை மாநில தேர்தல் ஆணையத்துக்கு உள்ளது.

    மேலும் படிக்க: அதிமுகவை விமர்சிக்க யாருக்கும் தகுதியில்லை: பாமகவுக்கு ஜெயக்குமார் பதில்!


    மேலும், தேர்தலை இரண்டு கட்டங்களாக  நடத்துவது தேவையற்றது. சட்டமன்ற தேர்தலே ஒரே தவணையில் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது.  உள்ளாட்சித் தேர்தலை  இரண்டு கட்டங்களாக  நடத்துவதாக சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படும்.  எனவே,  தேர்தலை ஒரே கட்டமாக நடத்த வேண்டும்” என்று தெரிவிக்கபட்டுள்ளது.

    இதையும் படிங்க: EXCLUSIVE: அதிமுக கூட்டணியில் தொடர்கிறோம்: பாமக விளக்கம்


    மேலும், தேர்தல் பார்வையாளராக மத்திய அரசு அதிகாரியையோ வேறு மாநிலத்தைச் சேர்ந்த அதிகாரியையோ நியமிக்க வேண்டும் என்றும் கோரப்பட்டுள்ளது.  தேர்தலில் பதிவாகும் வாக்குகள் வைக்கப்படும் அறைகளை கேமரா மூலம் கண்காணிக்க வேண்டும். தேர்தல் பணிகளில் மாநில போலீஸை ஈடுபடுத்தக் கூடாது. அவர்கள் ஆளுங்கட்சிக்கு ஆதரவாக செயல்படக் கூடும் என்பதால்  சி.ஆர்.பி.எஃப், சி.ஐ.எஸ்.ஃப். படை வீரர்களை பயன்படுத்த வேண்டும் என்றும் அதிமுக தரப்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
    Published by:Murugesh M
    First published: