முகப்பு /செய்தி /தமிழ்நாடு / உள்ளாட்சி தேர்தலில் அதிமுக, திமுக நேரடியாக போட்டியிட்ட இடங்கள் எவ்வளவு..?

உள்ளாட்சி தேர்தலில் அதிமுக, திமுக நேரடியாக போட்டியிட்ட இடங்கள் எவ்வளவு..?

திமுக- அதிமுக

திமுக- அதிமுக

  • Last Updated :

ஊரக உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்குப்பதிவு முடிவடைந்த நிலையில், எந்தெந்த கட்சிகள் எவ்வளவு இடங்களில் போட்டியிட்டுள்ளன? அதிமுகவும், திமுகவும் நேரடியாக எவ்வளவு இடங்களில் மோதின? என்பதை பார்க்கலாம்.

தமிழகத்தில் 27 மாவட்டங்களில் 515 மாவட்ட ஊராட்சி வார்டுகளுக்கு உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது. இதில், அதிமுக 435 இடங்களும், கூட்டணி கட்சிகளான பாஜக 81, தேமுதிக 29, பாமக 36, தமாகா 6 இடங்களிலும் போட்டியிட்டுள்ளன. அதேபோல், திமுக கூட்டணியில் திமுக 416 இடங்களில் போட்டியிட்டது. காங்கிரஸ் 74, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் 22, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 23, மதிமுக 10, விடுதலை சிறுத்தைகள் கட்சி 24, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி 4 இடங்களிலும் போட்டியிட்டுள்ளன.

இதை தவிர்த்து, அமமுக 498 இடங்களிலும், நாம் தமிழர் கட்சியினர் 364 இடங்களிலும் போட்டியிட்டனர். அதிமுகவும், திமுகவும் மொத்தம் 363 இடங்களில் நேரடியாக போட்டியிட்டுள்ளன.

அதேபோல், 27 மாவட்டங்களில் மொத்தம் உள்ள 5 ஆயிரத்து 90 ஊராட்சி ஒன்றிய வார்டுகளுக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டது. 23 இடங்களில் வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்வாகினர். இதை தவிர்த்து, 5 ஆயிரத்து 67 இடங்களுக்கு தேர்தல் நடந்தது. இதில், அதிமுக 3 ஆயிரத்து 842 இடங்களிலும், கூட்டணி கட்சிகளான பாஜக 535, தேமுதிக 434, பாமக 432, தமாகா 47 இடங்களிலும் போட்டியிட்டுள்ளன.

அதேபோல், திமுக 4 ஆயிரத்து 139, காங்கிரஸ் 421, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் 257, இந்திய கம்யூனிஸ்ட் 125, மதிமுக 92, விசிக 106, கொ.ம.தே.க 16 இடங்களிலும் போட்டியிட்டுள்ளன.

First published:

Tags: Local Body Election 2019