முகப்பு /செய்தி /தமிழ்நாடு / கோவிலில் சுவாமி சிலைகளோடு ஜெயலலிதாவின் உருவத்திற்கும் பூஜை செய்யும் தொண்டர்கள்!

கோவிலில் சுவாமி சிலைகளோடு ஜெயலலிதாவின் உருவத்திற்கும் பூஜை செய்யும் தொண்டர்கள்!

ஜெயலலிதாவின் உருவப்படத்திற்கும் பூஜை

ஜெயலலிதாவின் உருவப்படத்திற்கும் பூஜை

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவை அதிமுக தொண்டர்கள் இதய தெய்வம் என்றுதான் அழைப்பார்கள். அதை கோவை அதிமுக தொண்டர்கள் இப்போது மெய்ப்பித்துள்ளார்கள். படங்கள் : குரு

  • News18
  • 1-MIN READ
  • Last Updated :

கோவையில் கோவிலில் சுவாமி சிலைகளோடு முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் உருவப்படத்தை செதுக்கிவைத்து தொண்டர்கள் தினமும் கற்பூரம் ஏற்றி வழிபாடு நடத்தி வருகின்றனர். 

கோவை மாநகராட்சிக்குட்பட்ட 100-வது வார்டு, கணேசபுரம் பகுதியில் உள்ளது மூரண்டம்மன் கோவில். இந்தக் கோவிலின் எதிர்புறம் மாநகராட்சி யோகா மையம் செயல்படுகிறது. இந்த மையத்தில் சுவாமி சிலைகளும் வைக்கப்பட்டு தினமும் வழிபாடு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் தற்போது சுவாமி சிலைகளோடு சேர்த்து ஜெயலலிதா உருவப்படமும் செதுக்கப்பட்டுள்ளது. 8 டன் எடை கொண்ட ஒரு கல்லில் ஒருபுறம் காலபைரவர், ஆஞ்சநேயர் உள்ளிட்ட சுவாமி சிலைகளும், மறுபுறம் ஜெயலலிதாவின் உருவமும் செதுக்கப்பட்டுள்ளது.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் உருவசிலைக்கு பூஜை செய்யும் தொண்டர்கள்

தங்கள் பகுதிக்கு ஜெயலலிதா செய்த நன்மைகளுக்காக நன்றி தெரிவிக்கும் விதத்தில் அவரை தெய்வமாக வணங்கி வருவதாக தொண்டர்கள் கூறுகின்றனர்

யோகா மையத்தில் செதுக்கப்பட்டுள்ள ஜெயலலிதாவின் உருவப்படத்திற்கு தினமும் காலையும், மாலையும் கற்பூரம் காட்டி தொண்டர்கள் வழிபாடு நடத்தி வருகின்றனர்.

உயிருடன் இருக்கும் போது மட்டுமல்லாமல் மரணத்திற்குப் பிறகும் தொண்டர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்திருக்கிறார் ஜெயலலிதா என்பதற்கு இதுவே சாட்சி.

Also see...  சந்திரயான் 2 ஜூலை 22-ல் நிலவுக்கு பாய்கிறது!


அரசியல், சினிமா, வைரல், செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க. சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.</

First published:

Tags: Coimbatore, Jayalalithaa