Home /News /tamil-nadu /

திமுக உறுப்பினர் ஆதரவுடன் அதிமுக வெற்றி - குற்றாலம் பேரூராட்சி தலைவர் தேர்தலில் திடீர் திருப்பம்

திமுக உறுப்பினர் ஆதரவுடன் அதிமுக வெற்றி - குற்றாலம் பேரூராட்சி தலைவர் தேர்தலில் திடீர் திருப்பம்

அதிமுக வெற்றி

அதிமுக வெற்றி

Courtallam Municipality : குற்றாலம் பேரூராட்சி தலைவர் தேர்தலில் அதிமுக வெற்றி, திமுக உறுப்பினர் ஆதரவளித்ததால் திடீர் திருப்பம்.

    தென்காசி மாவட்டம், குற்றாலம் பேரூராட்சியில் 8 வார்டுகள் உள்ளன. இவற்றில் திமுக, அதிமுக தலா 4 வார்டுகளில் வெற்றி பெற்றன. இதனால், தலைவர், துணைத் தலைவர் பதவிக்கான மறைமுக தேர்தல் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.
    திமுக, அதிமுக சம வாக்குகளை பெற்றால் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்படும் நிலை இருந்தது.

    இதற்கு தயாராக இருந்த அதிமுக உறுப்பினர்கள் 4 பேரும் தலைவர், துணைத் தலைவர் தேர்தலுக்கான கூட்டத்தில் கலந்து கொண்டனர். ஆனால், திமுக உறுப்பினர்கள் 4 பேரும் கூட்டத்தில் கலந்து கொள்ளாததால் 2 முறை தலைவர், துணைத் தலைவர் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது.

    இந்நிலையில், 3 ஆவது முறையாக இன்று தலைவர், துணைத் தலைவர் பதவிக்கான மறைமுக தேர்தல் அறிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து பேரூராட்சி அலுவலகத்தில் போலீசார் பாதுகாப்புடன் தேர்தல் நடத்தும் அலுவலர் முத்து இளங்கோவன் முன்னிலையில் நடைபெற்ற தேர்தலில் திமுக, அதிமுக உறுப்பினர்கள் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    திமுக சார்பில் குமார்பாண்டியன், அதிமுக சார்பில் கணேஷ் தாமோதரன் ஆகியோர் போட்டியிட்டனர். இதில் அதிமுக சார்பில் போட்டியிட்ட கணேஷ் தாமோதரன் திமுக 2 வது வார்டு உறுப்பினர் கோகிலாவின் ஆதரவைப் பெற்று 5 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.

    Must Read : தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தின் உண்மையான குற்றவாளிகள் மீது ஒரு எப்ஐஆர் கூட இல்லை - சமூக ஆர்வலர் மேதா பட்கர்

    திமுக உறுப்பினர் குமார் பாண்டியன் 3 வாக்குகள் பெற்று தோல்வியடைந்தார். ஆளுங்கட்சியாக திமுக உள்ள நிலையில், ஆளுங்கட்சி உறுப்பினர் ஒருவர் அதிமுகவுக்கு ஆதரவளித்திருப்பது பெரும் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. வெற்றி பெற்ற பேரூராட்சி மன்ற தலைவருக்கு அதிமுக மாவட்ட செயலாளர் செல்வமோகன் தாஸ் பாண்டியன், கடையநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கிருஷ்ண முரளி என்ற குட்டியப்பா மற்றும் தொண்டர்கள் வாழ்த்துக்கள் தெரிவித்தனர் .

    செய்தியாளர் - ச.செந்தில், தென்காசி.
    Published by:Suresh V
    First published:

    Tags: ADMK, Courtallam, Local Body Election 2022, Tenkasi

    அடுத்த செய்தி