ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

அதிமுக பொதுக்குழுவில் பங்கேற்பாரா ஓபிஎஸ்?

அதிமுக பொதுக்குழுவில் பங்கேற்பாரா ஓபிஎஸ்?

ஓ.பன்னீர்செல்வம்

ஓ.பன்னீர்செல்வம்

பெரும்பான்மையான நிர்வாகிகள் பழனிசாமி வசம் உள்ளதால் கட்சியில் எடப்பாடி பழனிசாமியின் கை ஓங்கியுள்ளது.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :

  அதிமுகவில் ஒற்றைத் தலைமை விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில் பொதுக்குழுக் கூட்டம் சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரி மண்டபத்தில் நடப்பதற்காக ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது. அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு உறுப்பினர்களாக சுமார் 2600 பேர் உள்ளனர். இதில் 2300க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் எடப்பாடி பழனிசாமி ஆதரவு நிலைப்பாட்டில் உள்ளனர்.

  குறிப்பாக , அதிமுகவில் 65 சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளனர். இரட்டை இலையில் வெற்றிப்பெற்ற புரட்சி பாரதம் ஜெகன்மூர்த்தி உட்பட 63 பேர் எடப்பாடி பக்கமும் , மனோஜ்பாண்டியன் மற்றும் வைத்தியலிங்கம் என இரண்டே எம்எல்ஏக்கள் மட்டுமே ஓபிஎஸ் பக்கம் உள்ளனர்.பெரும்பான்மையான நிர்வாகிகள் பழனிசாமி வசம் உள்ளதால் கட்சியில் எடப்பாடி பழனிசாமியின் கை ஓங்கியுள்ளது.

  இந்நிலையில் சென்னையில் தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்திய ஓபன்னீர்செல்வம் அவரது இல்லத்தில்  அதிமுக தொண்டர்களை சந்தித்தார். ஓபிஎஸ் ஆதரவாளர்கள் சிலர் சென்னை மெரினாவில் உள்ள ஜெயலலிதா நினைவிடத்தில் கூடியுள்ளனர்.

  Also Read: பொதுக்குழுவுக்கு வாருங்கள்.. பேசித்தீர்த்துக்கொள்வோம் - ஓபிஎஸ்-க்கு கடிதம் எழுதிய இபிஎஸ்

  இந்நிலையில் பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்பது தொடர்பாக வைத்திலிங்கத்திடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். நாளைய பொதுக்குழு கூட்டத்தில் யார் பங்கேற்பார்கள் என்ற கேள்விக்கு நாங்கள் ஏன் புறக்கணிக்க வேண்டும் பங்கேற்பதாக முடிவு செய்துவிட்டோம் என்றார். ஓ பன்னீர்செல்வம் பொதுக்குழுவில் கலந்து கொள்வாரா என செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு. நீதிமன்ற உத்தரவுக்கு பிறகு முடிவு செய்யப்படும் எனப் பதிலளித்தார்.

  Published by:Ramprasath H
  First published:

  Tags: ADMK, Edappadi palanisamy