Home /News /tamil-nadu /

`திமுக-காங்கிரஸை கண்டித்து தமிழகமெங்கும் கண்டன பொதுக்கூட்டம்’- அதிமுக

`திமுக-காங்கிரஸை கண்டித்து தமிழகமெங்கும் கண்டன பொதுக்கூட்டம்’- அதிமுக

ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிச்சாமி.

ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிச்சாமி.

  • News18
  • 1 minute read
  • Last Updated :
    திமுக, காங்கிரசை கண்டித்து வரும் 25-ம் தேதி மாவட்ட தலைநகரங்களில் கண்டன பொதுக்கூட்டம் நடத்தப்படும் என அதிமுக அறிவித்துள்ளது.

    சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் கட்சியின் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் நடைபெற்றது. அப்போது, இலங்கையில் நடைபெற்ற இறுதிப் போரின் போது ஒன்றரை லட்சம் தமிழர்கள் கொல்லப்பட்டதற்கு திமுக, காங்கிரஸ் கூட்டணியே காரணம் என குற்றம்சாட்டி தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் செய்தியாளர்களிடம் கூறினார்.

    இது குறித்து பேசிய ஓ.பன்னீர்செல்வம் “போர் முடிந்து விட்டதாக கருணாநிதி பேட்டி அளித்தார். கருணாநிதியின் பேச்சை நம்பி வெளிவந்தவர்கள் உயிரிழப்பு பதுங்கு குழியில் இருந்து வெளிவந்த 40,000 பேர் உயிரிழப்பு” என்று தெரிவித்தார்.

    மேலும், அனைத்து மாவட்டங்களிலும் வரும் 25-ம் தேதி பொதுக்கூட்டம் நடத்தப்படும் என்றும் முடிவெடுக்கப்பட்டது. அந்த முடிவின் அடிப்படையில் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் பொதுக்கூட்டம் நடைபெறும் என்று துணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி செய்தியாளர்களிடம் கூறினார்.

    கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி, இலங்கையில் முன்னாள் அதிபர் ராஜபக்சேவே, போர்க்குற்றத்திற்கு அப்போதைய காங்கிரஸ் திமுக கூட்டணிதான் காரணம் என அண்மையில் பேசியதை சுட்டிக்காட்டினார். இடைத்தேர்தல், மக்களவைத் தேர்தல் வர உள்ள நிலையில் அரசின் சாதனைகளை மக்களிடம் மாவட்டச் செயலாளர்கள் கொண்டு சேர்க்க வேண்டும் எனவும் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
    Published by:Saravana Siddharth
    First published:

    Tags: Admk meeting against dmk congress, Admk protest, Srilankan tamil war

    அடுத்த செய்தி